- Advertisement -
ஐ.பி.எல்

இவர் தான் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தங்கம்.. ராஜஸ்தான் வீரருக்கு ரவி சாஸ்திரி பாராட்டு

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 44வது லீக் போட்டியில் லக்னோவை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் தங்களுடைய 8வது வெற்றியை பதிவு செய்தது. அதனால் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை 90% உறுதி செய்துள்ளது. ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 196 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக கேப்டன் கே.எல். ராகுல் 76, தீபக் ஹூடா 50 ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் 24, ஜோஸ் பட்லர் 34 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதை மிடில் ஆர்டரில் அப்படியே பயன்படுத்திய கேப்டன் சஞ்சு சாம்சன் அரை சதமடித்து 71* (33) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

ரவி சாஸ்திரி பாராட்டு:
அவருடன் இளம் வீரர் துருவ் ஜுரேல் அரை சதமடித்து 52 ரன்கள் எடுத்தார். அதனால் 19 ஓவரிலேயே 199/3 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் மிகவும் எளிதாக வெற்றி பெற்றது. முன்னதாக இந்த போட்டியில் 5வது இடத்தில் களமிறங்கி அசத்தலாக விளையாடிய துருவ் ஜுரேல் தனது முதல் ஐபிஎல் அரை சதத்தை பதிவு செய்து சஞ்சு சாம்சனுடன் இணைந்து 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ராஜஸ்தானின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

கடந்த வருடம் இதே போல ராஜஸ்தான் அணியில் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்ட அவர் சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் ராஞ்சியில் நடைபெற்ற 4வது போட்டியில் தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை அற்புதமாக விளையாடி காப்பாற்றிய அவர் வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

அதே போல கடைசி போட்டியிலும் சிறப்பாக விளையாடிய அவர் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா டெஸ்ட் தொடரை வெல்வதற்கு உதவினார். அதன் காரணமாக அடுத்த எம்எஸ் தோனியாக உருவாகும் வழியில் ஜுரேல் இருப்பதாக ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டியிருந்தார். அதே ஃபார்மில் தற்போது ஐபிஎல் தொடரிலும் அசத்தும் துருவ் ஜுரேல் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தங்கம் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க: காரணம்ல்லாம் சொல்ல முடியாது.. இஷான் கிசானுக்கு அபராதம் விதித்த பிசிசிஐ.. நடந்தது என்ன?

இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இந்த ஜுரேல் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தங்க நகை. தற்போது அவர் சிறப்பான வருங்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். சீரியஸ் நண்பா” என்று பதிவிட்டுள்ளார். அதே போல இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்திய ஜுரேல் மீது ராஜஸ்தான் அணி முழுமையாக நம்பி வாய்ப்பு கொடுக்கும் என்று கேப்டன் சஞ்சு சாம்சனும் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -