முகம் நிறைய தாடி. நரைத்த முடி. கண்ணன் ஒட்டி தளர்ந்த தேகம். தோனி இப்போ எப்படி இருக்காரு பாருங்க – புகைப்படம் இதோ

Dhoni-1

கடந்த ஆண்டு இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் சர்வதேச போட்டிகளில் களமிறங்காத தோனி ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து ஆவலாக காத்து இருந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது ஐபிஎல் தொடரும் நடைபெறுவது எந்தவொரு இறுதி முடிவும் இதுவரை எடுக்கப்படாமல் உள்ளது.

Dhoni

தோனி மீண்டும் களத்திற்கு திரும்புவதை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்திய அணியில் பொதுவாகவே மற்ற வீரர்கள் சமூகவலைதளத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பதால் அவ்வப்போது அவர்கள் குறித்த தகவல்கள் நமக்கு எளிதாக கிடைக்கும். ஆனால் தோனி வழக்கத்திற்கு மாறாக சமூக வலைத்தளத்தில் இருந்து சற்று தள்ளியே இருக்கும் நபர்.

அவரது மனைவியோ அல்லது அவர்களது உதவியாளர்களோ புகைப்படம் எடுத்து வெளியிட்டால் தான் உண்டு. அந்த அளவிற்கு சமூக வலைத்தளத்தில் இருந்து தோனி விலகியே இருக்கிறார். தற்போது தோனி பண்ணை வீட்டில் இருக்கும் தோட்டத்தை டிராக்டர் மூலம் உழுவது போல ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியது.

மேலும் அதனை தொடர்ந்து தற்போது வயதான தோற்றத்துடன் இருப்பது போன்ற தோனியின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் சிறிய தலைமுடியுடன், தாடி எல்லாம் நரைத்து, கண்ணம் ஒட்டி பார்ப்பதற்கு வழக்கத்தை விட சற்றே வயதானவர் போல தோனி காட்சியளிக்கிறார்.

- Advertisement -

இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அனைவரும் சிங்கம் மாதிரி இருந்த எங்களது தல இப்படி ஆகிவிட்டாரே என்பது போன்று தங்களது வருத்தத்தை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தோனி வீட்டிற்கு திரும்பும்போது மீண்டும் அதே பழைய தலையாக, கெத்தாக திரும்புவார் என்றும் சிலர் பதிவுசெய்து வருவது குறிப்பிடத்தக்கது.