இந்த வருட ஐ.பி.எல் தொடருக்காக தோனி ரெடியாகி இருக்கும் லுக்கிற்கு பெயர் இதுதானாம் – விவரம் இதோ|

Dhoni

ஐபிஎல் வந்துவிட்டால் போதும் ஒரு மிகப்பெரிய பேன்ஸி ஃபேஷன் திருவிழாவை போல் ஒவ்வொரு வீரர்களும் தங்களது உடம்பில் டாட்டூ இட்டுக் கொள்வதும் தங்களது ஹேர்ஸ்டைலை வித்தியாசமாக வைத்துக் கொள்வது வாடிக்கையாகி விடும். அதிலும் குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, கெரோன் பொல்லார்ட் போன்றவர்களும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா ,மகேந்திர சிங் தோனி போன்றவர்களும் இதனை வருடாவருடம் செய்துவிடுவார்கள்.

2011 ஆம் ஆண்டு எல்லாம் ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே என தனது தலையின் இடது பக்கம் அப்படியே முடியை வைத்து வரைந்திருந்தார். 2014 ஆம் ஆண்டு தோனி அற்புதமாக தலையின் இடது வலது பக்கம் இருக்கும் முடிகளை எடுத்துக்கொண்டு வித்தியாசமாக ஒரு ஹேர்ஸ்டைல் விட்டிருந்தார். மிலிட்டரி கட், மோஹாக், லாங் ஹேர் என தோனியின் ஹேர் ஸ்டைலை கவனிக்காதவர்கள் இல்லை என கூறலாம்.

சொல்லப்போனால் அனைத்து அணிகளிலும் உள்ள வீரர்கள் இப்படி செய்து வருகிறார்கள். மொத்தமாக ஐபிஎல் தொடரை எடுத்துக் கொண்டால் லாங் ஹேர், ஷார்ட் கட், மிலிட்டரி கட், மோஹாக், சால்ட் அண்ட் பெப்பர், க்ளீன் ஷேவ் இது போன்ற வித்தியாசமான ஹேர்ஸ்டைலை பார்த்து விடலாம். ஒவ்வொரு அணி வீரர்களும் ஒவ்வொரு மாதிரி தங்களது சிகை அலங்காரத்தை ரசிகர்களுக்காக பிரத்தேயகமாக வடிவமைத்து மைதானத்தில் வலம் வருவார்கள்.

csk-vs-mi

தற்போது 438 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் சென்னை அணிக்காக களம் இறங்கிய சென்னை அணியின் கேப்டன் தோனி தனது ரசிகர்களுக்கு நியூ லுக்கில் தரிசனம் கொடுத்திருக்கிறார். முரட்டுத்தனமான இங்கிலீஷ் மேன் ஸ்டைலில் தாடியை விட்டு நேற்று போட்டிக்கு வந்தார். அவரது இந்த புதிய ஸ்டைலிற்கு “இங்கிலீஸ் மேன் ஹெவி முஸ்டேச்” என்ற பெயரையும் இட்டுள்ளார்கள்.

- Advertisement -

csk

இந்த தாடி எத்தனை நாள் வைத்திருப்பார் என்று தெரியவில்லை. என்று ரசிகர்கள் இதனை பார்த்ததும் அவரை சிலாகித்துக் கொண்டாடி விட்டனர். மேலும் லாக்டவுன் நேரத்தில் வெள்ளை தாடியுடன், தலை முழுவதும் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருந்த தோனி தற்போது மீண்டும் யங் லுக்கிற்கு மாறியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது என்றே கூறலாம்.