நானே ஒரு மொக்க..! என்னை விட தோனி பெரிய மொக்க..! தோனியை கலாய்த்து தள்ளும் பிரபல கிரிக்கெட் வீரர்..! – காரணம் இதுதான்..?

sunil
- Advertisement -

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. மேலும், இந்த போட்டியில் மெதுவாக விளையாடிய தோனி மீதான விமர்சங்கள் எழுந்து வரும் நிலையில் தோனியின் ஆட்டம் தனது மோசமான ஆட்டத்தை விட படு கேவலமாக இருந்தது என்று சுனில் கவாஸ்கார் தெரிவித்துளளார்.
ms
கடந்த 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்ற இந்திய அணி, 60 ஓவர்கள் கொண்ட போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கவாஸ்கர் ஆமை வேகத்தில் ஆடி 174 பந்தில் 36 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது இன்று வரை படுமோசமான பேட்டிங்காக இன்று வரை கவாஸ்கரின் இன்னிங்ஸ் விமர்சிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை(ஜூலை 14) இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் சிறந்த பினிஷர் என்று கூறப்படும் தோனி மிகவும் பொறுமையான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி வந்தார். தோனியின் இந்த ஆமை வேக ஆட்டம் குறித்து விமர்சித்துள்ள சுனில் கவாஸ்கர் “தற்போதுள்ள சிறந்த பினிஷர்களில் தோனியும் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசியதால் ரன்கள் எடுக்க முடியாத சூழ்நிலை உருவாகியது. இதனால், களத்தில் இருந்த பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அதிகரித்தது. ஆனால் தோனியின் ஆமை வேக ஆட்டம் என் பழைய மோசமான ஆட்ட்டதை நினைவூட்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
sunil-gavaskar
இதுகுறித்து மேலும் தெரிவித்த கவாஸ்கர் “தோனியின் இந்த தடுமாற்றம் குறித்து புரிந்துகொள்ள முடிகிறது, ஏனெனில் முற்றியிலும் சாத்தியமில்லை நிலையில் தான் அவர் களமிறங்கினார். அதனால் அவரது மனது கொஞ்சம் எதிர்மறையான எண்ணங்களை பெற்றிருக்கும். பின்னர் அவர் அடித்த அணைத்து ஷாட்களும் பீல்டர்களிடம் தஞ்சம் புகுந்தது.” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Advertisement