தோனியை பார்த்து என் மனைவி கேட்ட அந்த ஒரு வார்த்தை தான் தோனியை உச்சத்திற்கு கொண்டு சென்றது – ஸ்பான்சர் பேட்டி

Sponcer

தோனி இந்திய அணிக்காக 2004ஆம் ஆண்டு அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்னர் ஆறு வருடங்கள் இளம் வீரராகவும், நடுத்தர குடும்பத்தின் மகனாகவும் கடுமையாக உழைத்து கஷ்டப்பட்டு இருக்கிறார் தோனி. அவருக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்க BAS தயாரிப்பு நிறுவன உரிமையாளர் சோமி கோலி ஆறு மாதங்கள் யோசித்திருக்கிறார். இதுகுறித்து தற்போது பேசி இருக்கிறார் அந்த சோமி கோலி.

dhoni bat

தோனிக்கு கிரிக்கெட் உபகரணங்களை கொடுத்து ஸ்பான்சர் செய்யும் படி எனது டீலர்களில் ஒருவரான பரம்ஞ்சித் சிங் (தோனியின் நண்பர்) என்னை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். தொடர்ந்து ஆறு மாதங்கள் எனக்கு தொலைபேசி வாயிலாக நச்சரித்துக் கொண்டே இருந்தார். ஆறுமாதம் யோசித்த பின்னர் 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தோனி கிரிக்கெட் உபகரணங்களை ஸ்பான்சர் செய்கிறேன் என்று ஒப்புக்கொண்டு ஸ்பான்சர் செய்தேன்.

அதன் பின்னர் ஆறு வருடங்கள் கழித்து 2004 ஆம் ஆண்டு சண்டிகரில் அவரை சந்தித்தேன். அப்போது தான் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். அந்த போட்டிக்குப் பின்னர் எனது தொழிற்சாலைக்கு வந்தார் தோனி. என்னிடம் தரமான பேட்களை கேட்டார். மேலும் நான் அவரை எனது வீட்டிலேயே தங்கும்படி கூறினேன். அப்போது எனது வீட்டிற்கு வந்த தோனியிடம் எனது மனைவி தோனியை பார்த்து இவர் யார் என்று கேட்டு விட்டார்.

Sponcer

அப்போது தோனியை யாருக்கும் தெரியாது, ஆனால் என் மனைவி தோனியை பார்த்து அவர் கேட்டதை அவரை வெகுவாகப் பாதித்துவிட்டது. அடுத்த நாள் உங்களது மனைவியின் வார்த்தைகள் என்னை தூங்க விடவில்லை என்று கூறினார் தோனி. பல மணி நேரங்களாக அதனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

அதன் பின்னர் அடுத்த பாகிஸ்தான் போட்டியில் அனைவரும் வியக்கத்தக்க வகையில் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அந்தப் போட்டிக்கு பின்னர் இரவு 11 மணிக்கு என்னை தொலைபேசி வாயிலாக அழைத்து உங்களது மனைவியிடம் பேச வேண்டும் என்று கூறினார் தோனி. அவரிடம் பேசிய தோனி…

Dhoni

ஆன்ட்டி எனது பெயர் தோனி என்று கூறினார். அதற்கு எனது மனைவி மகனே உனது பெயரை தான் கிரிக்கெட் உலகமே சொல்லிக்கொண்டிருக்கிறது. நீ நிறைய சாதிக்கப் போகிறாய் என்று வாழ்த்தி அனுப்பினார் எனது மனைவி இவ்வாறு கூறியுள்ளார் BAS பேT தயாரிப்பு உரிமையாளர் சோமி கோலி.