தோனியை கட்டம் கட்டி தூக்கிய பி.சி.சி.ஐ. அப்போ இனிமே வாய்ப்பே இல்லையா – ஷாக்கிங் நியூஸ் இதோ

Dhoni

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகளில் தோனி பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருந்த வேளையில் இந்த ஐபிஎல் உறுதியான விடயம் அவர்களுக்கு ஒரு ஆறுதல் தந்து உள்ளது. ஆனால் தோனி இனி சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் விரைவில் ஓய்வு அறிவிப்பார் என்ற பீதியுடன் ரசிகர்கள் காத்து இருக்கின்றனர்.

ஏனெனில் இந்திய அணியின் பயிற்சி பட்டியலில் தோனியின் பெயர் தற்போது இடம்பெறவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய அணியின் ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட டோனி தற்போது பயிற்சிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அடுத்த சில வாரங்களில் பி.சி.சி.ஐ நடத்தும் பயிற்சிகளில் கலந்துகொள்ள உள்ளது.

Dhoni

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் பயிற்சிகளை தொடங்க உள்ள இந்த பயிற்சி பெறும் வீரர்களின் பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. 2019-20 ஆம் ஆண்டுக்கான ஒப்பந்தத்திலும் அவர் நீக்கப்பட்டுள்ளதால் இனி அவர் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என்றும் எனவே ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்கள் மட்டுமே பயிற்சியில் கலந்துகொள்ள இருப்பதாக பிசிசிஐ தரப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

dhoni

மேலும் பயிற்சியில் கலந்து கொள்வது குறித்து தோனியும் தங்களிடம் ஏதும் தெரிவிக்கவில்லை என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் தோனியின் பெயர் பயிற்சி பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.