கொல்கத்தா பகலிரவு டெஸ்டில் தோனி வர்ணனையை செய்யமாட்டார் – பி.சி.சி.ஐ அதிரடி

Dhoni

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி தற்போது இந்திய அணியுடனான டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த டி20 தொடருக்கு பின்னர் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் அணி இந்திய அணியுடன் மோத இருக்கிறது.

Ground

இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி வரும் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது. இந்த போட்டி இந்தியாவின் முதல் பகல் இரவு போட்டி என்பதால் இந்த போட்டியின் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியில் தோனியை சிறப்பு வர்ணனையாளராக அழைக்க ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி கேட்டிருந்தது ஆனால் இதுவரை பிசிசிஐ தோனி விடயம் குறித்து எதையும் உறுதி செய்யவில்லை மேலும் எந்த ஒரு தெளிவான பதிலையும் அளிக்கவில்லை.

Dhoni-1

இதுகுறித்து பிசிசிஐ நிர்வாகத்தில் இருந்து வந்த தகவலின்படி : தோனி இன்னும் ஓய்வு பெறவில்லை என்பதால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த வீரராக தான் இருக்கிறார். எனவே அவர் வர்ணனையாளராக செயல்பட்டால் இரட்டை ஆதாய குற்றச்சாட்டும் ஏற்படும் என்பதால் வர்ணனையாளராக செயல்பட மாட்டார் என்று அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -