இவர் கேப்டனாக இருந்திருந்தால் தோனி அணியில் நிச்சயம் இடம்பிடித்து இருப்பார் – வெளியான தகவல்

Dhoni

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய தோனி இந்த இரண்டு மாத ஓய்வினை பேராஷூட் ரெஜிமன்ட் பிரிவில் பயிற்சி பெற முடிவு செய்திருந்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கான தொடரில் அவர் பெயர் அறிவிக்கப்படவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணி தேர்வுக்கு முன் இந்திய அணி கேப்டன் கோலிக்கு ஒருநாள் மற்றும் டி20 ஆகிய தொடர்கள் ஓய்வு அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தனது ஓய்வு தேவை இல்லை நான் தொடர்ந்து விளையாடப் போகிறேன் என்று கோலி அறிவித்தார்.

- Advertisement -

அதன்படி கோலியை தற்போது 3 வடிவ கிரிக்கெட்டிற்கும் மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஒருவேளை இந்த டி20 மற்றும் ஒருநாள் தொடரில் கோலி விலகியிருந்தால் ரோஹித் அணியின் கேப்டனாக இருந்திருப்பார். ஒருவேளை ரோஹித் அணியின் கேப்டனாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக தோனியை விட்டு கொடுத்திருக்க மாட்டார். தோனி அணியில் இடம் பெற்று இருப்பார்.

Rohith-1

கோலி மீண்டும் அணிக்கு விளையாடுவேன் என்று அறிவித்தால் தோனி தானாகவே முன்வந்து இந்த தொடரில் ஓய்வு எடுத்துக் கொள்வதாக கூறியது குறிப்பிடத்தக்கது. எனவே தற்போது தோனி ஓய்வு விடயத்தில் கோலி கேப்டன்ஷிப் ஒரு முக்கிய காரணியாக மாறி உள்ளது என்று பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் அணியின் கேப்டனாக ரோஹித் இருந்திருந்தால் கண்டிப்பாக தோனி விளையாடி இருப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement