தோனி முடிவெடுக்கவில்லை என்றாலும் அடுத்தமாதம் இதுதான் நடக்குமாம் – அணி நிர்வாகம் அறிவிப்பு

Dhoni-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான தோனி இந்திய அணியின் கேப்டன் கூல் என்ற சிறப்பு பெயருடன் ரசிகர்களால் அழைக்கப்படுபவர். இந்நிலையில் தோனி உலகக் கோப்பை தொடருக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதனால் தோனி விரைவில் ஓய்வை அறிவிப்பார் என்று பலரும் கூறி வந்தனர்.

Dhoni

- Advertisement -

ஆனாலும் இன்றுவரை தோனி தனது ஓய்வு குறித்த எந்தவொரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை தொடர்ந்து அடுத்த மாதம் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் வீரர் தோனி தேர்வு செய்யப்பட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகிஉள்ளது.

அதன்படி வரும் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு அடுத்தடுத்து இரண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் இந்த தொடருக்கு தயாராகும் வகையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க தேர்வுக்குழு ஆர்வம் காட்டி வருகிறது. எனவே இந்த தொடரில் தோனி நிச்சயம் தேர்வு செய்யப்பட மாட்டார். அவருக்கு பதிலாக பண்ட் தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhoni 1

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் தோனி இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற கங்குலியும் தோனியின் எதிர்காலம் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்.

Advertisement