ஒரே பதிலில் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவைத்து மறைமுகமாக சுட்டிக்காட்டிய – தேர்வுக்குழு தலைவர்

dhoni
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய தோனி இந்த இரண்டு மாத ஓய்வினை பேராஷூட் ரெஜிமன்ட் பிரிவில் பயிற்சி பெற முடிவு செய்திருந்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கான தொடரில் அவர் பெயர் அறிவிக்கப்படவில்லை.

dhoni

- Advertisement -

இந்நிலையில் நேற்று இந்திய அணி அறிவிக்கப்பட்ட பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேர்வுக் குழுவின் தலைவர் எம் எஸ் கே பிரசாத் தோனி குறித்து கூறியதாவது : தோனி ஓய்வு குறித்து இனியும் பேச எதுவும் இல்லை.

இந்திய அணிக்காக இரண்டு உலக கோப்பையை வென்று கொடுத்த மிகச் சிறந்த கேப்டன் தோனி. அவர் ஒரு ஜாம்பவான் இது போன்ற மிகச் சிறந்த வீரருக்கு எப்போது ஓய்வு பெறவேண்டும் என்று அவர்களுக்கே தெரியும். அவரின் ஓய்வு அவர் கையில்தான் உள்ளது எங்களிடம் எந்த முடிவும் கிடையாது.

Pant

மேலும் அதேசமயம் இனிவரும் தொடர்களில் அணியின் வருங்காலத்தை கணக்கில் கொண்டு தொடர்ந்து கீப்பராக பண்ட்டிற்கே வாய்ப்பு அளிக்கப்படும் என்று உறுதியாக கூறினார் தேர்வுக்குழு தலைவர் பிரசாத். இதனால் மே.இ தீவுகள் தொடர் முடிந்து அடுத்து வரும் தொடர்களில் தோனியின் பெயர் பரிசீலிக்கப்பட்டாலும் அவர் பேட்ஸ்மேனாகவே அணியில் தொடர்வார். மற்றபடி இனி தோனி கீப்பராக வாய்ப்பே இல்லை என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியது போல தெரிகிறது.

Advertisement