கிரிக்கெட்டிற்கு பிறகு தோனி என்ன செய்யப்போகிறார் ? எதிர்கால திட்டம் இதுதானாம் – விவரம் இதோ

Dhoni

மகேந்திர சிங் தோனி திடீரென தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு திரைச்சீலை போர்த்தி ஓய்வை அறிவித்து விட்டார்.இதன் காரணமாக அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி இருக்கிறார்கள். இந்நிலையில், ஓய்விற்குப் பின்னர் தோனி என்ன செய்யப்போகிறார். என்பது அனைவரின் கேள்வியாக இருக்கிறது. தோனியிடம் தற்போது பல கோடி ரூபாய் சொத்து இருக்கிறது.

Raina-2

அவரது சொந்த ஊரான ராஞ்சியில் அவருக்கு பண்ணை வீடும், தோட்டங்களும் இருக்கின்றது. மேலும், மகி ரேஸிங் டீம் என்ற ஒரு பைக் ரேஸ் பந்தய அணியையும் வைத்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து வாசனைப் பொருட்கள் தயாரிக்கும் ‘7’ என்ற ஒரு பர்ஃப்யூம் கம்பெனியையும் வைத்திருக்கிறார். அதனைத் தாண்டி ஸ்போர்ட்ஸ் உடைகள் தயாரிக்கும் என்ற ஒரு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனம்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உடைகள் ஸ்பான்சர் செய்யும் நிறுவனமாக இருக்கிறது. அதனை தாண்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கும் என் சீனிவாசன் இந்தியா சிமெண்ட்ஸ் என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் கூடுதல் தலைமை செயல் அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார் தோனி. இப்படி பலவிதங்களில் இவருக்கு வருமானம் வந்து கொண்டிருக்கிறது. தற்போது நாற்பது வயதாகி விட்டாலும் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.

dhoni

ஒரு சிலர் தோனி அரசியலில் ஈடுபடப் போகிறார் என்று கூறி வருகிறார்கள். ஆனால் அதுகுறித்து எந்த ஒரு சிறு துணுக்கை கூட கொடுத்து விடவில்லை தோனி. அதற்கு மாறாக ராணுவத்தில் அவ்வப்போது தனது தலையை காட்டி வருகிறார். இதனைத் தாண்டி சமீபத்தில் அனைவரும் ஊரடங்கு நேரத்தில் இருக்கும்போது தோனி ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு சென்றார்.

- Advertisement -

அங்கு உள்ள 50 ஏக்கர் நிலத்தில் ஜாலியாக விவசாயம் செய்து கொண்டிருந்தார். இதன் புகைப்படங்களை நாம் பார்க்க முடிந்தது. அதனைத் தாண்டி அவருடைய நண்பர் ஒருவருடன் சேர்ந்து தனது பண்ணை வீட்டில் உள்ள விவசாய நிலத்தில் ஆர்கானிக் முறையில் பயிரிடப்படும் தர்பூசணி, பப்பாளி போன்றவற்றை பயிரிட்டு வருகிறார் .இந்த இயற்கை விவசாயத்தில் தோனி நிறுவனம் தயாரித்த ஒரு சில குறிப்பிட்ட வித்தியாசமான உரம் பயன்படுத்தப்படுகிறது.

Dhoni 1

இந்த உரம் விளைச்சலை கொடுத்து விட்டால். இந்த உரத்தை தோனி அருகில் உள்ள விவசாயிகளுக்கு கொடுக்கப் போவதாகவும் செய்திகள் வந்துள்ளது. இந்த ஐபிஎல் தொடர் முடிந்ததும் இந்த உரம் குறித்த தகவலும் அந்த ஒரு வணிகம் செய்யப்போகும் நிறுவனத்தின் தகவலும் வெளியிடப்படும் என்று தெரிகிறது.