தோனி மட்டும் இருந்திருந்தா நேற்று இந்தியா தோத்து இருக்காது – ரசிகர்கள் வேதனை

Jadeja-3
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்களை குவித்தது. அந்த அணியின் துவக்க வீரர் குப்தில் 79 ரன்களும், டைலர் 73 ரன்களும் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Saini

- Advertisement -

அதனை தொடர்ந்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 48.3 ஓவர்களில் 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது மட்டுமின்றி தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

இந்த போட்டியில் இந்திய அணியின் முன்வரிசை வீரர்கள் யாரும் அரன் குறிக்காது சமயத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் மட்டும் அரைசதம் அடித்து தனது பங்களிப்பை அளித்தார். அதன் பிறகு ஜடேஜா மற்றும் சைனி ஆகியோரது ஆட்டம் இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய ஆட்டமாக அமைந்தது மேலும் இந்த தோல்விக்கு பிறகு இந்தியனின் ரசிகர்கள் சில கருத்துக்களை முன்வைத்துள்ளனர் .அதன்படி பின்வரிசையில் தோனி இருந்திருந்தால் நிச்சயம் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு இருக்கும் என்று கூறியுள்ளனர்.

Jadeja 2

அதற்கு காரணம் பின்வரிசையில் தோனி இருக்கும் போது கடைசி வரை ஆட்டத்தை கொண்டு சென்று இறுதியில் தனது அதிரடி மூலம் கண்டிப்பாக வெற்றியை தந்திருப்பார் என்ற நம்பிக்கையும் ரசிகர்களிடையே உள்ளது. மேலும் பல ஆண்டுகளாக தோனி அந்த ஃபார்முலாவை கடைப்பிடித்து வந்ததால் ரசிகர்கள் அனைவரும் அவரது இந்த செயலை தற்போது பாராட்டி வருவது ட்ரெண்டிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement