இந்த ஐ.பி.எல் கோப்பை சி.எஸ்.கே வுக்கு தான். தோனி செய்த செயல் – வைரலாகும் புகைப்படம்

Dhoni-Csk
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இதுவரை இந்திய அணிக்காக விளையாடவில்லை. மேலும் அதற்கடுத்து தோனி விரைவில் ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் இதுவரை தோனி தனது ஓய்வு குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

dhoni

- Advertisement -

மேலும் கடந்த ஆறு மாதங்களாக அவர் எந்த ஒரு சர்வதேசப் போட்டியிலும் பங்கேற்காததால் பிசிசிஐ நிர்வாகத்தின் ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த ஆண்டு வரை ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த தோனி இம்முறை ஒப்பந்த பட்டியிலில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்டார். இந்த நீக்கம் அவரின் கிரிக்கெட் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது என்பது உண்மையே.

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாட உள்ள தோனி இந்த ஐபிஎல் தொடரை கைப்பற்றும் நோக்கிலும், தனது ஆட்டு திறனை மேம்படுத்தும் நோக்கிலும் ராஞ்சியில் தீவிர கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டு உள்ளார். மேலும் தற்போது ராஞ்சியில் உள்ள தியோரி கோயிலுக்கு சென்று பூஜை செய்தார். அந்த கோவிலில் உள்ள துர்க்கை அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக கருதபடுகிறது. தோனி இந்த அம்மனின் தீவிர பக்தர்.

Dhoni

தியோரி கோயிலுக்கு சென்று தோனி துர்க்கை அம்மனை வழிபட்டு காணிக்கை செலுத்தினார். இதற்கு முன்னதாக 2018ம் ஆண்டு சென்னை அணி ஐபிஎல் பட்டத்தை வென்ற போதும் அந்த தொடருக்கு முன்னர் துர்க்கை அம்மனுக்கு காணிக்கை செலுத்தி இருந்தார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக தோனி அந்த அம்மனை வழிபட்டுச் சென்றார். அந்த தொடரில் தோனி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement