தோனியின் வாழ்வில் இன்று மறக்கமுடியாது ஒரு நாள். அது என்ன தெரியுமா ?

dhoni
- Advertisement -

இந்திய அணியை பொறுத்தவரை தோனி ஒரு மிகச் சிறந்த கேப்டனாக விளங்கியவர். மேலும் மூன்று வகையான icc தொடர்களையும் கேப்டனாக இருந்து இந்திய அணிக்காக பெற்றுக் கொடுத்துள்ளார்.

dhoni

- Advertisement -

இந்நிலையில் அவர் இந்த உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவதாக பிரபல செய்தி நிறுவனமான பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை பெரும்பாலும் தோனியின் பேச்சு அடிபட்டுக்கொண்டே இருக்கும் . அவர் சிறப்பாக ஆடினாலும் சரி மோசமாக அதனால்தான் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் அதிகமாக எழும்.

இன்று தோனியின் வாழ்வில் முக்கியமான ஒரு தினம் அது யாதெனில் இதே ஜூலை நான்காம் தேதி 2010 ஆம் ஆண்டு சாக்ஷி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். தல தோனி சாக்ஷி தம்பதியருக்கு ஜீவா தோனி என்கின்ற பெண் குழந்தை உள்ளது.

Ziva

தோனி எந்த அளவுக்கு அவரது ரசிகர்களிடம் பிரபலமாக உள்ளாரோ அதே போன்று தோனியின் மகளும் அவ்வளவு பிரபலம் இன்றுடன் தோனிக்கு திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனால் தோனியின் ரசிகர்கள் அவருக்கு இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர் . இந்த வருட இறுதியில் தோனி ஓய்வு அறிவிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement