ஓய்வுக்கு முன்னர் இந்திய அணியில் இதை செய்த பின்னரே விலகுவேன் – விடாப்பிடியாக இருக்கும் தல தோனி

Dhoni-1
- Advertisement -

இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. அடுத்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் கலந்து கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

Dhoni

- Advertisement -

உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தோனி தற்போது வரை ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை. மேலும் இந்திய அணியின் நிர்வாகம் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்க முன் வருவதாக தெரியவில்லை. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அவர் இடம் பெறுவது கடினம் என்று தற்போது வரை தகவல்கள் தெரிவித்துள்ளன.

மேலும் தோனி ஓய்வு குறித்து பி.சி.சி.ஐ யிடம் விரைவில் பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 15 பேர் கொண்ட பட்டியலில் தோனியின் பெயர் இடம் பெற்றாலும், அவர் ஆடும் அணியில் இடம்பெற மாட்டார் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்படும் தோனியின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக இருக்கிறது.

pant 5

அப்படி இருந்தாலும் இந்தியாவின் எதிர்கால விக்கெட் கீப்பரான பண்ட்டை மெருகேற்றும் வேலையை தோனி தொடங்கியுள்ளதாக தெரிகிறது. அதன் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 கோப்பை வரை தோனி விளையாடுவார் என்று தெரிகிறது. அதுவரை பண்ட்டை அவர் முழு திறன் வாய்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக மாற்றுவதற்கான வேலையில் ஈடுபட போவதாக தெரிகிறது. எனவே தோனி அணியில் இடம் பெற்று ஆடினாலும் ஆடவில்லை என்றாலும் அவர் தொடர்ந்து பண்டிற்கு ஆலோசனைகளை வழங்க உள்ளதாகவும் தெரிகிறது.

Advertisement