தோனிக்கு மிலிட்டரியை தாண்டி ஒரு விருப்பம் இருக்கிறதாம். அது இதுதான் – தோனியின் நண்பர் பேட்டி

- Advertisement -

இந்திய அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி இனிமேல் இந்திய அணிக்காக விளையாடுவாரா என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. கிரிக்கெட்டை தவிர அவருக்கு இந்திய ராணுவத்திலும் இயற்கையின் மீதும் அலாதியான ஆவலும், பெரும் அர்ப்பணிப்பும் இருப்பதை நாம் சமீபகாலமாக பார்த்து வருகிறோம்.

Dhoni-1

- Advertisement -

இந்நிலையில் நேற்று அவர் தனது 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த பிறந்தநாள் சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. தோனி தற்போது ஓய்வு பெறும் தருணத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் அவரது முடிவுகள் தெரியவில்லை. என்பதால் இந்த பிறந்தநாள் அவருக்கு சமூக வலைத்தளத்தில் பெரும் கொண்டாட்டங்களை கொண்டு வந்து சேர்த்தது. ஆனால் அவர் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை.

அமைதியான முறையில் தனது பண்ணை வீட்டில் இயற்கையாக விவசாயம் செய்து கொண்டு எளிமையாக கொண்டாடி இருக்கிறார். அவரது குடும்பத்தினருடன் மிக எளிமையாக பிறந்தநாளை கொண்டாடி விட்டு தனது பண்ணை வீட்டில் உள்ள 50 ஏக்கர் அளவிலான நிலத்தில் இயற்கை முறைப்படி விவசாயம் செய்து வருகிறார்.

பப்பாளி, வாழை, தர்ப்பூசணி ஆகியவற்றை ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்து பயிரிட்டு வளர்த்து வருகிறார். தனது இடத்திலேயே இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உரத்தின் மூலம் இதற்கு செரிவு ஊட்டுகிறார். அதன் பின்னர் இவற்றால் கிடைக்கும் விளைச்சலை வைத்து அந்த உரத்தை வர்த்தகத்திற்கு கொண்டு வரலாம் என்ற திட்டமும் அவரிடம் உள்ளது.

- Advertisement -

சமீபத்தில் கூட ஒரு விவசாய டிராக்டர் ஓட்டியதை பார்த்திருப்போம். இதுகுறித்து தோணியின் சிறுவயது நண்பர் திவாகர் கூறுகையில் …..

நாங்கள் தோனியுடன் சேர்ந்து புதிதாக ஒரு திட்டத்தை வைத்துள்ளோம். அவரது பண்ணை நிலத்தில் விளைவிக்கப்படும் இந்த விளைச்சலை வைத்து ‘நியூ கிலோபல்’ என்ற நிறுவனத்துடன் சேர்ந்து அவர் தயாரித்த உரத்தினை விவசாயிகளுக்கு கொடுக்க உள்ளோம். இது வெற்றி அடைந்து விட்டால் போதும் மற்ற வேலைகளை ஆரம்பித்து விடுவோம் அவர் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவது குறித்து எதனையும் தற்போதுவரை யோசிக்கவில்லை என்றும் கூறியுள்ளார் அவர்.

Advertisement