கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக களம் இறங்கிய மகேந்திரசிங் சிங் தோனி இந்திய அணிக்காக 90 டெஸ்ட் போட்டிகள், 350 ஒருநாள் போட்டிகள், 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரது தலைமையில் இந்திய அணி ஒரு டி20 உலகக் கோப்பை, ஒரு ஒருநாள் உலக கோப்பை, ஒரு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் என ஐ.சி.சி நடத்திய அனைத்து கோப்பைகளையும் கைப்பற்றியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை செமி பைனல் போட்டிக்குப் பின்னர் இவர் ஆடுகளத்திற்கு வரவே இல்லை . கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்தார். இதன் காரணமாக ஓய்வு பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் டி20 உலக கோப்பை தொடரில் ஆடலாம் என்று அவர் எண்ணியிருக்கிறார் போல் இருக்கிறது.
இருந்தாலும் அதற்கான அடித்தளமாக இருந்த ஐபிஎல் தொடர் தற்போது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது சர்வதேச கிரிக்கெட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
மேலும் தொடர்ச்சியாக பலமாதங்கள் இந்திய அணியில் விளையாடாத காரணத்தினால் அவரை இந்திய அணியி ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்தும் அவரது பெயரை நீக்கியது.

இதனைத் தாண்டி அவரது திட்டம் குறித்து பல முன்னாள் வீரர்கள் பலவாறு பேசி வருகின்றனர். ஒரு முன்னாள் வீரர் கூறுகையில் :டி20 கிரிக்கெட் தொடர் எப்படி செல்கிறது என்பதை பொறுத்து, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பின்னர் தனது எதிர்காலம் குறித்து தெரிவிப்பார் தோனி என்று கூறியுள்ளார்.
அதே போல் இந்திய அணியில் தோனியுடன் விளையாடிய மூத்த வீரர் ஒருவர் கூறுகையில்… இனி அவர் இந்தியாவிற்கு ஆட தோனி எந்த முயற்சியும் எடுப்பதாக தெரியவில்லை. இந்திய அணி அவருக்கான மாற்று வீரர்களை கண்டுபிடித்து விட்டது. இதனை அவர் தடுக்க விரும்பவில்லை என்றார்.

அதேநேரத்தில் மற்றொரு வீரர் பற்றி கூறுகையில் : தோனி தற்போது தன்னை நிரூபிக்க எதுவும் இல்லை. தற்போதைய அணியை தோனி கலைக்கவும் விரும்பவில்லை. ஆனால் முறையான வழியனுப்புதல் போட்டி வைத்து அனுப்ப வேண்டும் என்று அவர் விரும்புகிறார், இவ்வாறு கூறியுள்ளார். அந்த வீரர் பொறுத்திருந்து பார்ப்போம் டோனி தனது முடிவு எப்போது அறிவிக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
இதனால் தோனி குறித்து தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் செய்திகளுக்கு இது முற்றுப்புள்ளியாக மாற வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி ஏற்கனவே பல முன்னாள் வீரர்களும் தோனிக்கு விடை கொடுக்கும் போட்டி வைத்து தகுந்த மரியாதையுடன் அனுப்பவேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது தோனியின் எதிர்பார்ப்பும் அதுவாகவே இருக்கிறது என்று தெரியவந்துள்ளது. மேலும் தோனியின் கடைசி போட்டியில் அவரை கேப்டனாக செயல்பட வைக்கும் முடிவு கோலியின் கைகளிலேயே உள்ளது.



