தல அஜித் போன்று “சால்ட் அன்ட் பெப்பர்” லுக்கிற்கு மாறிய தல தோனி – தோனியின் மனைவி பகிர்ந்த புகைப்படம்

Dhoni
- Advertisement -

ஊரடங்கு காலத்தில் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் தங்களது வீட்டில் முடங்கிக் கிடக்க இந்திய கிரிக்கெட் வீரர்களும் தங்களது வீடுகளிலிருந்து சமூக வலைதளம் மூலமாக ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களுக்கு விருப்பமான நபர்ர்களுடன் நேரலையில் லைவாக அரட்டை அடித்து வருகின்றனர்.

Dhoni-1

- Advertisement -

இது தற்போது ஒரு புதிய ட்ரண்ட் ஆகவே மாறி உள்ளது. தற்போதைய சூழலில் தனிமனித இடைவெளியை அதிகம் கடைபிடிக்கப்படுவதால் பலரும் சமூக வலைதளம் மூலமாக தங்களுக்கு பிடித்தவர்களுடன் உரையாடி வருகின்றனர். ஆனால் இந்த சமூக வலைத்தளத்திலிருந்து எப்பொழுதும் விலகி இருக்கும் டோனி குறித்து பல செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

அவர் சர்வதேச போட்டிகளில் இருப்பாரா ? இல்லை ஓய்வு பெற்றுவிடுவாரா ? என பல்வேறு ஊடகங்களும் அவர் குறித்த செய்திகளை அடுத்தடுத்து வெளியிட்டு வந்தாலும் தோனி தரப்பில் இருந்து எந்த ஊரு தகவலும் வெளிவருவதில்லை. ஆனால் தோனியின் மனைவி அவரது புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அந்தப் புகைப்படங்கள் பதிவிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே இணையத்தில் ஹிட் அடிக்கும். இன்றும் இணையத்தில் தோனியின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

Dhoni-1

அந்த வகையில் அண்மையில் கூட சிஎஸ்கே நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தோனி குறித்த காணொளியை பகிர்ந்தது. அந்த வீடியோவில் தோனி தனது பண்ணை வீட்டில் உள்ள புல் தரையில் உட்கார்ந்து இருந்தார். அவரது பக்கத்தில் மகள் ஜிவா நின்று கொண்டிருந்தார். இருவரும் செல்லப் பிராணியுடன் விளையாடுவது போன்ற வீடியோ அப்போது இணையத்தில் வைரலானது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது தோனியின் மனைவி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று தோனி சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் காணப்படுகிறார். மேலும் அப்போது தன் மகள் விளையாடிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்ப்பது போன்று எடுக்கப்பட்டுள்ள அந்த புகைப்படம் பதிவிடப்பட்ட சில மணி நேரத்திலேயே இணையத்தில் வைரல் ஆனது.

மேலும் இந்த புகைப்படத்தை கண்ட சென்னை ரசிகர்கள் பலரும் தமிழ் சினிமாவின் தலையும், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலையும் ஒரே ஸ்டைலுக்கு மாறியுள்ளனர். இருவரும் சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில் அசத்தலாக உள்ளனர் என்றும் கருத்துக்களைப் தெரிவித்து வருவது மட்டுமின்றி இந்த புகைப்படத்தினையும் அதிகளவு பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement