மெய்சிலிற்க செய்யும் தோனியின் உண்மை முகம் !

Dhoni
- Advertisement -

உலக கிரிக்கெட் வரலாற்றில் தோனியை ஒரு போதும் மறக்க முடியாத அளவிற்கு, தோனி பல சாதனைகள் புரிந்துள்ளார். பல அரும் பெரும் சாதனைகள் புரிந்தாலும், அவர் எப்போதும் தன்னிலை மறவாத நல்ல மனிதனாக இருக்கிறார்.

dhoni

- Advertisement -

ஆடுகளத்திலாகட்டும், வெளியில் ஆகட்டும் அவர் சக மனிதர்களிடம் அன்பாக பழக கூடியவர், அவ்வளவு எளிதில் பழமையை மறந்துவிடமாட்டார்.

Tea-Stall-thomas

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பதற்கு முன்னர், தோனி காகர்புர் ரயில் நிலையத்தில் TT-ஆக பணியாற்றிவந்தார். அந்த சமயத்தில் அருகில் இருக்கும் டீ கடைக்கு செல்லும் பழக்கத்தை அவர் வைத்திருந்தார். அந்த டீ கடையின் உரிமையாளர் பெயர் தாமஸ்.

Dhoni-Tea-stall

அதன்பிறகு தோனி இந்திய அணியில் இடம் பிடித்தார், அப்போது ஒருமுறை கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்க அவர் சென்றுள்ளார். அந்த சமயம் தாமஸ் அவர்கள் தோனியை சந்திக்க சென்றுள்ளார், அவரை பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொண்ட தோனி அவரை கட்டி தழுவியுள்ளார். அதோடு அவருடன் நட்சத்திர ஹோட்டலில் இரவு உணவு உன்ன அழைத்து சென்று அசத்தியுள்ளார்.

thoms

அந்த நாளின் முடிவில், தாமஸ் அவர்கள் ஆனந்தத்தில் கண் கலங்கிவிட்டாராம். அதோடு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் தன்னை தொடர்புகொள்ளுமாறும் தோணி கூறினாராம். அதன் பிறகு தனது டீ கடையின் பெயரை “தோணி டீ ஸ்டால்” என பெயர்மாற்றம் செய்துள்ளார் தாமஸ்.

Advertisement