தோனி தொடர்ந்து தீபக் சாஹரை சீண்டி வருவது ஏன்? அப்படி தோனி அவர் மீது காண்டாக என்ன காரணம் – அம்பத்தி ராயுடு பதில்

Rayudu-and-Deepak
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் தோனி அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பலம் வாய்ந்த குஜராத் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சிஎஸ்கே அணிக்கு கோப்பையை பெற்று தந்தார். களத்தில் அவரது அமைதியான குணமும், மிகச் சிறப்பான கேப்டன்சியும் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ள வேளையில் ரசிகர்கள் மத்தியில் “கேப்டன் கூல்” என்ற பெயரும் அவருக்கு உண்டு.

CSK

- Advertisement -

ஆனாலும் தோனி சிஎஸ்கே அணியில் தொடர்ச்சியாக தீபக் சாகரை மட்டும் சீண்டி வரும் நிகழ்வுகளை நாம் அவ்வப்போது பார்த்து வருகிறோம். அதுமட்டுமின்றி இது குறித்த வீடியோவும் வெளியாகி இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் ஏற்கனவே தோனி பேட்டிங் பயிற்சி மேற்கொள்ளும் போது தீபக் சாகரை பேட்டால் அடிக்க செல்வது போன்ற ஒரு வீடியோ வைரலானது.

அதனை தொடர்ந்து டாஸ் போட்டுவிட்டு மீண்டும் ஓய்வறைக்கு திரும்புகையில் தீபக் சாகரை அடிக்க கை நீட்டுவது போன்ற ஒரு வீடியோவும் வைரலானது. அதேபோன்று நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு தோனியிடம் ஆட்டோகிராப் வாங்க சென்ற தீபக் சாகருக்கு தோனி ஆட்டோகிராப் வழங்க மறுத்தார். அதோடு கைக்கு வந்த எளிதான கேட்சை பிடிக்க தவறிய உனக்கு நான் எதற்கு ஆட்டோகிராப் போட வேண்டும் என்பது போன்று தோனி கேட்கும் வீடியோவும் வைரலானது.

Deepak Chahar

இப்படி தீபக் சாகரை மட்டும் தோனி தொடர்ச்சியாக ஏன் சீண்டி வருகிறார்? என்பது குறித்து கேள்விக்கு சென்னை அணியில் இருந்து ஓய்வு பெற்ற அனுபவ வீரரான அம்பத்தி ராயுடு பேட்டி ஒன்றில் சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சென்னை அணியில் தோனியை எதிர்த்து பேசும் ஒரே ஆள் தீபக்சாகர் மட்டும்தான். தீபக்சாகருக்கு கிரிக்கெட்டில் எல்லாம் தெரிந்தது போன்ற ஒரு குணம் உடையவர்.

- Advertisement -

இருந்தாலும் அவர் ஒரு நல்ல கிரிக்கெட்டர் நல்ல வீரர் தான். தோனி ஓய்வறையில் தனக்கு தோன்றும் கருத்துக்களை கூறினால் அதனை எதிர்த்து தீபக் சாகர் மட்டுமே சில கருத்துக்களை கூறுவார். இது எப்போதுமே சிஎஸ்கே அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் வழக்கமான நடக்கும் நிகழ்வுதான். இப்படி தோனியை எதிர்த்து தீபக் சாகர் பேசுவது தான் தோனிக்கும் பிடிக்கும்.

தோனியும் தீபக்சாகர் மீது நிறையவே அன்பு வைத்திருக்கிறார். அதோடு தோனிக்கு தீபக் சாகர் தம்பி போன்றவர். எனவே அவரிடம் தொடர்ச்சியாக தோனி சீண்டலில் ஈடுபட்டு வருகிறார் என அம்பத்தி ராயுடு விளக்கம் அளித்துள்ளார்.

- Advertisement -

deepak 1

ஏற்கனவே அண்மையில் சென்னையில் நடைபெற்ற எல்.ஜி.எம் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தோனி கூட அந்த நிகழ்ச்சியின் மேடையில் தீபக் சாகர் குறித்து சில விடயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் தீபக் சாகர் அருகில் இருந்தால் ஏன் அவர் இருக்கிறார்? என்று வெறுப்பாக இருக்கும். ஆனால் அவர் அருகில் இல்லை என்றால் மனது அவரை தேடும்.

இதையும் படிங்க : CSK : சி.எஸ்.கே அணியின் அடுத்த கேப்டனை தோனி பட்டை தீட்டி வருகிறார். இவர்தான் அடுத்த கேப்டன் – அம்பத்தி ராயுடு பேட்டி

தீபக்சாகர் ஒரு போதை பொருளை போன்றவர் அவர் எப்பொழுதுமே அருகில் இருக்க வேண்டும் என மனம் தேடுவதாக தோனி குறிப்பிட்டிருந்தார். அதோடு தீபக்சாகர் எப்பொழுது முழு முதிர்ச்சியுடன் செயல்படுவார் என்பது எனக்கே தெரியவில்லை என்றும் தனது மகள் ஸீவாவிற்கு இப்போது இருக்கும் பக்குவம் கூட தீபக் சாஹருக்கு 50 வயது ஆனால் கூட வராது என்று தோனி கலகலப்பாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement