பெங்களூரு அணிக்கெதிரான இந்த சிறப்பான வெற்றிக்கு இதுவே காரணம் – தோனி மகிழ்ச்சி

Dhoni
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 35 வது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி கோலி மற்றும் படிக்கல் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தினால் அதிரடியான துவக்கத்தை பெற்றாலும் பின்னால் வந்த வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் மட்டுமே அடித்தனர்.

rcbvscsk

- Advertisement -

அதன்பின்னர் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து சென்னை அணி பெற்ற வெற்றி குறித்து பேசிய கேப்டன் தோனி கூறுகையில் :

இந்த போட்டியின் போது பணி வரும் என்று நாங்கள் கவலைப்ட்டோம். ஆனால் அந்த பிரச்சனை இல்லை. பெங்களூர் அணி முதல் 8 9 ஓவர்களில் சிறப்பான துவக்கத்தை பெற்றிருந்தனர். அதன் பிறகு மைதானம் கொஞ்சம் ஸ்லோ ஆனது. ஜடேஜா இந்த போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

bravo

அதேபோன்று பிராவோவை நான் முன்கூட்டியே கொண்டு வந்தேன். ஏனெனில் தொடர்ச்சியாக நான்கு ஓவர்களை இதுபோன்ற மைதானங்களில் வீசுவது கடினம். அனைத்து வீரர்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாடினர். இங்குள்ள மூன்று மைதானங்களும் ஒவ்வொரு மாதிரியான தன்மையுடையவை.

csk

அதிலும் ஷார்ஜா மைதானம் மிகவும் ஸ்லோவான ஒரு ஆடுகளம். எனவே நாங்கள் பேட்டிங் செய்யும்போது ரைட் லெஃப்ட் காம்பினேஷன் வேண்டும் என்று நினைத்து அதன்படியே களம் இறங்கினோம். பிராவோவின் பந்துவீச்சு இந்த போட்டியில் பெரிய அளவில் மாற்றத்தை தந்தது என ஆர்சிபி அணிக்கெதிரான வெற்றி குறித்து தோனி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement