MS Dhoni : ஒரு பக்கம் மகிழ்ச்சி ஒரு பக்கம் கஷ்டம் கொல்கத்தா அணியுடனான வெற்றி குறித்து – தோனி

ஐ.பி.எல் தொடரின் 23ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும்

Dhoni
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 23ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.

Dhoni

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் சென்னை அணிக்கு 109 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

கொல்கத்தா அணி சார்பாக 4 வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக ரசல் 44 பந்துகளில் 50 ரன்களை அடித்தார். இதில் 5 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். ரசலின் இந்த ஆட்டம் காரணமாகவே கொல்கத்தா அணி ஓரளவு ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகர் 4 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

Chahar

பின்னர் ஆடிய சென்னை அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 111 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. சென்னை அணி சார்பாக துவக்க ஆட்டக்காரர் டுபிலிஸிஸ் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். தீபக் சாகர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

- Advertisement -

Duplesis

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய தோனி : நான் சென்னை அணிக்காக பல ஆண்டுகளாக ஆடி வருகிறேன். எனக்கு பல நல்ல விடயங்கள் சென்னையில் நடந்ந்துள்ளன. குறிப்பாக எனது டெஸ்ட் அறிமுக போட்டியும் சென்னையில் தான் நடந்தது. இங்கு கிடைக்கும் ரசிகர்களின் ஆதரவும், அன்பும் வியக்கவைக்கிறது. சென்னை மக்கள் அவர்களில் ஒருவராக என்னை முழுவதுமாக ஏற்றுக்கொண்டுள்ளனர். அதனாலே எப்பொழுதும் எனக்கு இங்கு இவ்வளவு அன்பு கிடைக்கிறது.

Bravo

இந்த போட்டியின் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும், பிராவோவின் காயம் வருத்தமளிக்கிறது. ஒரு ஆல்ரவுண்டராக அவரை நாங்கள் அணியில் அவரின் பலத்தை இழக்கிறோம். மேலும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி எதிரணியை குறைந்த ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். அதற்கு காரணம் சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர்கள் பாலாஜி மட்டும் எரிக் தான் என்று தோனி கூறினார்.

Advertisement