நாங்க சரியா விளையாடல. ஆனா ஜெயித்தது இப்படித்தான் – கொல்கத்தா போட்டிக்கு பிறகு தோனி பேட்டி

dhoni 1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 38-வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது. அதன் பின்னர் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது சிறப்பான துவக்கத்தை பெற்றது.

ruturaj

- Advertisement -

டூபிளெஸ்ஸிஸ் 43 ரன்களையும், கெய்க்வாட் 40 ரன்களும் குவித்தனர். அதன்பின்னர் மொயின் அலி 32 ரன்களை குவிக்க அடுத்து வந்த ராயுடு, ரெய்னா, தோனி ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஒரு கட்டத்தில் 2 ஓவரில் 26 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலை ஏற்பட்டபோது 19வது ஓவரில் இரண்டு பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் ஜடேஜா 22 ரன்களை குவித்து அசத்தினார்.

அதன் பின்னர் இறுதி ஓவரில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட போது கடைசி ஓவரை சுனில் நரேன் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் சாம் கரனும், ஐந்தாவது பந்தில் ஜடேஜாவும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன் காரணமாக கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட போது தீபக் சாஹர் சிங்கிள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

jadeja 1

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனி கூறுகையில் : இந்த போட்டியில் வெற்றி பெற்றது சிறப்பான ஒன்று. கிரிக்கெட்டில் சில முறை நன்றாக விளையாடினாலும் தோற்றுவிடுவோம். ஆனால் ஓரளவு சுமாராக விளையாடியும் வெற்றி பெற்றிருப்போம், அது தான் இன்றும் நடந்தது. நாங்கள் இந்த போட்டியில் பல தவறுகளை செய்தோம்.

ஆனாலும் போட்டிக்கு திரும்பி வந்துள்ளோம். அதேபோன்று பவுலிங்கிலும் பேட்ச், பேட்ச்சாக சிறப்பாக பந்துவீசினோம். 170 ரன்கள் என்பது தேசிங் செய்யக்கூடிய ஒரே இலக்குதான் இருப்பினும் அதற்கு சரியான பாட்னர்ஷிப் அவசியம் இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் சரியாக பேட்டிங் செய்யவில்லை. இருப்பினும் இறுதி நேரத்தில் ஜடேஜா வெற்றிக்கு அழைத்துச் சென்றார் என தோனி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement