டுவைன் பிராவோ சி.எஸ்.கே அணியிலிருந்து நீக்கப்பட்டது ஏன்? – கேப்டன் தோனி கொடுத்த விளக்கம்

Bravo
- Advertisement -

சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து திடீரென ஜடேஜா வெளியேறியதால் காரணமாக தற்போது மீண்டும் தோனி சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள சென்னை அணியானது இனிவரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயத்திற்கு இடையே தற்போது விளையாடி வருகிறது. அதன்படி சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 46 ஆவது லீக் போட்டியில் கேப்டனாக மைதானத்திற்கு வந்த தோனி டாசின் போது பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

Ruturaj Gaikwad - Devon Conway CSK vs SRH 2.jpeg

- Advertisement -

அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்து வீசுவதாக கூறியதால் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து முடித்து. அதன்படி விளையாடிய சென்னை அணியானது துவக்க வீரர்களான ருதூர்ஜ் கெய்க்வாட் மற்றும் டேவான் கான்வே ஆகியோரது அதிரடியான காரணமாக முதல் விக்கெட்டுக்கு 182 ரன்கள் சேர்த்து மிகப்பெரிய துவக்கத்தை அளித்தது.

அதன் பிறகு இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவிக்க தற்போது 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் சென்னை அணியின் அனுபவ ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ சி.எஸ்.கே அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. இந்த விடயம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Bravo

இந்நிலையில் இந்த போட்டியில் டுவைன் பிராவோவிற்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறித்து டாஸின் போதே சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனி தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

இன்றைய போட்டியில் விளையாடும் அளவிற்கு பிராவோவிற்கு உடற்தகுதி ஒத்துழைக்கவில்லை. முழு உடற்தகுதி இல்லாததன் காரணமாக அவர் இந்த போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தோனி தெளிவான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க : அடுத்த ஆண்டு விளையாடுவீர்களா? வர்ணனையாளரின் கேள்விக்கு டாஸின் போது பதிலளித்த – தல தோனி

அவருக்கு பதிலாக சமீபத்தில் தனது திருமணத்தை முடித்த நியூசிலாந்து துவக்க வீரர் டேவான் கான்வே அணியில் இணைந்துள்ளார். அதே போன்று மற்றொரு அறிமுக வீரராக சிமர்ஜித் சிங் இந்த போட்டியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement