கல்யாணத்துக்கு முன் நான் அப்படி. இப்போ ஒன்னும் இல்ல – தோனி கலகல பேட்டி

Sakshi

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி இங்கிலாந்தில் நடந்து முடிந்த 50 ஓவர் உலக கோப்பை தொடருக்குப் பின் கிரிக்கெட் போட்டிகளில் இன்னும் பங்கேற்கவில்லை. அவர் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் தற்போது நடந்து முடிந்த பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரில் பங்கேற்கவில்லை. அவ்வப்போது பயிற்சியைத்தவிர பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார்.

Dhoni-1

இந்நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் இல்லற வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசினார். அதில் தோனி குறிப்பிட்டதாவது : திருமணத்துக்கு முன்பு வரை அனைத்து ஆண்களும் சிங்கம் தான். நானும் மற்றவர்களைப் போல ஒருவன் கணவன் தான் என்னுடைய மனைவி என்ன விரும்புகிறாரோ அதை செய்ய அனுமதி வழங்கி விடுவேன்.

ஏனெனில் என்னுடைய மனைவி மகிழ்ச்சியாக இருந்தால் தான் நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் அதேபோல் மனைவி கூறும் எல்லாம் விடயத்திற்கு ஓகே சொன்னால்தான் அவர் மகிழ்ச்சியாக இருப்பார். ஆகவேதான் நான் அவர் நினைப்பது எல்லாம் செய்ய விட்டுவிடுவேன் திருமண வாழ்க்கையின் முக்கிய தருணம் 50 வயதிற்குப் பிறகுதான். ஏனென்றால் 55 வயதை கடந்துவிட்டால் உங்களுடைய உண்மையான காதல் வெளிவரும்.

Sakshi

அந்த வயதில் தான் நீங்கள் உங்கள் வாழ்க்கையை வழக்கமான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு மற்ற விஷயங்களைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தார்கள் என்று தோனி கூறினார். தோனிக்கும் சாக்ஷிக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஜிவா என்ற பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -