நேற்றைய போட்டியில் பிராவோவை ஏன் அணியில் சேர்க்கவில்லை – கேப்டன் தோனி கொடுத்த விளக்கம்

Bravo
- Advertisement -

சென்னை அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ நேற்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. இந்த ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாகத்தில் முதல் 2 போட்டிகளிலும் விளையாடிய பிராவோ அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். குறிப்பாக மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தியது மட்டுமின்றி பேட்டிங்கிலும் 8 பந்தில் 23 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

bravo

- Advertisement -

அதேபோன்று பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியிலும் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் இப்படி இந்த ஆண்டு இரண்டாம் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பிராவோ நேற்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஏன் விளையாட வைக்கவில்லை என்ற கேள்வி எழுந்தது.

பிராவோ சமீபத்தில் நடைபெற்ற கரீபியன் லீக் தொடரில் செயின்ட் கிட்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு கோப்பையை வென்று கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் ஏன் விளையாடவில்லை என்பது குறித்து பேசிய சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கூறுகையில் : அணியில் ஒரு மாற்றமாக சாம் கரனை பிராவோவிற்கு பதிலாக கொண்டு வந்துள்ளோம்.

bravo

ஏனெனில் கரீபியன் லீக் தொடரில் விளையாடும் போது பிராவோவிற்கு சில தசைப்பிடிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் அந்த பிரச்சினை காயமாக அதிகரிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் இன்று அவருக்கு ஓய்வு அளித்துள்ளோம். இனி வரும் போட்டிகளில் அவர் முக்கியம் என்பதால் தற்போது அணியின் காம்பினேஷனை மாற்றி வருகிறோம். அவருடைய அனுபவம் நிச்சயம் இந்த அணிக்கு தேவை என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 171 ரன்கள் குவிக்க அதன் பின்னர் விளையாடிய சிஎஸ்கே அணியானது போட்டியின் கடைசி பந்தில் வெற்றி இலக்கை எட்டி அசத்தியது. அதுமட்டுமின்றி புள்ளி பட்டியலிலும் முதல் இடத்திற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement