முகமது ஷமிக்கு ஆதரவு குரல் கொடுத்தார் தோனி.

dhoni
- Advertisement -

ஒரேநேரத்தில் பல்வேறு புகார்களில் சிக்கியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமி விரைவில் அனைத்து பிரச்சனைகளுக்கும் சுமூகமான தீர்வை கண்டு விரைவில் அணிக்கு திரும்ப வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
mohammed1

கடந்த வாரத்தில் முகமது ஷமியின் மனைவி அவர்மீது பரபரப்பான பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதில் முக்கியமானது தன்னுடைய கணவருக்கு பல்வேறு பெண்களுடன் முறைதவறிய உறவு உள்ளதாகவும், பல்வேறு நாட்டு பெண்களுடனும் தகாத உறவில் அடிக்கடி ஈடுபடுவதாகவும், பாகிஸ்தானை சேர்ந்த ஒரு விபச்சாரியுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், விளையாட செல்லும் நாடுகளில் சில புரோக்கர்களின் உதவியுடன் பல பெண்களுடன் வேறு வேறு ஓட்டல்களில் உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் இது அனைத்தும் பிசிசிஐக்கு தெரிந்தும் அவர்கள் அமைதியாக இருக்கின்றார்கள் என்று பரபரப்பு குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து மேலும் தனது கணவர் முகமது சமி சமூகவலைத்தளங்களில் பல பெண்களுடன் அந்தரங்கமாகவும் சில பெண்களுடன் ஆபாசமாகவும் பேசிய ஸ்கிரீன்ஷாட்களை வெளியிட்டுள்ளார். மேலும் தனது கணவர் பேசிய சில பெண்களின் மொபைல் எண்ணையும் இணைத்திருந்தார்.இந்நிலையில் உடனடியாக பிசிசிஐ முகமது ஷமியை தான் செய்திருந்த ஒப்பந்தத்தில் இருந்து விடுவித்துவிட்டது.

sami

முதலில் உன் குடும்ப பிரச்சனைகளை சரிசெய்து கொள். பின்னர் அணிக்கு திரும்பு என்று சொல்லிவிட்டது. இந்நிலையில் ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்து தற்போது முகமது சமி மீது 498A/323/307/376/506/328/34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். அதில் “முகமது ஷமி மிகச்சிறந்த வீரர், அவர் அனைத்து பிரச்சனைகளையும் முடித்துவிட்டு விரைவில் அணிக்கு திரும்ப வேண்டும், அது ஷமியின் குடும்ப பிரச்சனை அதனால் அதுகுறித்து கருத்துசொல்ல வேறெதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

sami

Advertisement