வீடியோ : சரியான நேரத்தில் பக்காவா டி.ஆர்.எஸ் எடுத்த தல தோனி – இல்லனா என்ன நடந்திருக்குமோ ?

Dhoni-4
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி தற்போது திரில்லிங்கான துவக்கத்தை பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. 14வது ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் இவ்விரு அணிகள் மோதிய போது மும்பை அணி மிகப்பெரிய இலக்கைத் துரத்தி வெற்றி பெற்றது. இதனால் மும்பை அணி இந்த போட்டியில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ruturaj 1

- Advertisement -

அதற்கேற்றாற்போல் மும்பை அணி சிறப்பான துவக்கத்தினை பெற்ற போதும் ருதுராஜ் கெய்க்வாட்டின் சிறப்பான ஆட்டம் காரணமாக சிஎஸ்கே அணி 156 ரன்கள் என்ற டீசன்டான ரன்களை எட்டியது. அதன்பின்னர் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணியின் ஓப்பனர்கள் குவின்டன் டி காக் மற்றும் அன்மொல்பிரீட் சிங் துக்கத்திலேயே சென்னை அணியை அதிரடியாக எதிர்த்து விளையாட ஆரம்பித்தனர்.

இந்நிலையில் மூன்றாவது ஓவரின் போது 11 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்த டி காக்கை தீபக் சாகர் எல்.பி.டபிள்யூ செய்தார். ஆனால் அவர் அதற்கு அம்பயர் நாட் அவுட் வழங்க தோனி டிஆர்எஸ் மூலம் அந்த விக்கெட்டை பெற்றார். ரீபிளேவின் போது அந்த பந்து ஸ்டம்பை தாக்கியது தெரிந்ததும் 3வது அம்பயர் டி காக் அவுட் என்று அறிவித்தார்.

ஆரம்பத்தில் தோனி இருமானதாக இருந்ததால் டிஆர்எஸ்-க்கு செல்ல மாட்டார் என்று தோன்றியது. ஆனால் தீபக் சாகர் பந்து நிச்சயம் ஸ்டம்பில் அடிக்கும் இது அவுட் தான் பந்து வெளியில் செல்லவில்லை ஸ்டம்பை நோக்கி தான் சென்றுள்ளது என்று கூறினார். இதன் காரணமாக உடனடியாக தோனி டிஆர்எஸ் காலுக்கு சென்றார்.

சாகரின் வார்த்தையை நம்பி உடனடியாக சரியான முடிவை எடுத்த தோனி அந்த விக்கெட்டையும் பெற்றார். அதன் பின்னர் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பொல்லார்டு என அடுத்தடுத்து முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேற மும்பை அணியானது இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 136 ரன்களை மட்டுமே குவித்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

Advertisement