கடந்த சில மாதங்களாக தோனியின் பெர்பார்மன்ஸ் சற்று ஓய்ந்து தோனியின் பெயர் சற்று மங்கி இருந்தன. ஆனால் கடந்த புதன் கிழமை நடந்த ஆட்டத்தின் மூலம் சில நாட்களாக கிரிக்கெட் தலைப்பு செய்திகளில் இருப்பது தோனியின் பெயர் மட்டும் தான். அந்த போட்டியில் மூலம் ” நான் திரும்பி வந்துட்டான் னு சொல்லு” என்பது போல இருந்தது டோனியின் ஆட்டம்.
தோனியின் ஒய்வு எப்போது என்று பலரும் எதிர்பார்த்துக் ஒண்டிருந்த நிலையில் தாம் இன்னும் பிட்டாக இருப்பதாக நிரூபித்துவிட்டார் தோனி. கடந்த புதன் கிழமை நடந்த ஐபில் போட்டியின் போது 34 பந்துகளில் 70 ரன்களை குவித்த தோனியை பல்வேறு பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல முன்னாள் மேற்கிந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விவ் ரிச்சர்ட் தோனியின் இந்த ஆட்டத்தை கண்டு வியந்து பாராட்டியுள்ளார் .இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ” தற்போது ஐபில் ளில் ஆடிவரும் தோனி ஆரம்பத்தில் விளையாடிய ஒரு சில போட்டிகளை போல் இல்லாமல்,கடந்த புதன் கிழமை நடைபெற்ற போட்டியில் தோனி தான் இன்னமும் ஒரு சிறந்த ஆட்டக்காரர் தான் என்று நிரூபித்து விட்டார் ”
மேலும் அந்த போட்டியின் பொது சென்னை மற்றும் பெங்களூர் என்று இரண்டு அணிக்குமே சற்று பதற்றமாக தன இருந்தது அனால் எப்போதும் போல தான் ஒரு கேப்டன் கூல் தான் என்று நிரூபித்து விட்டார் தோனி, தோனியின் இந்த பார்ம் தொடருமென்று நான் நம்புகிறேன். இதே போன்று அவர் சர்வதேச போட்டியிலும் ஆவர் என்று நான் நம்புகிறேன் ” ரிச்சர்ட்