ஆரம்பமும் முடிவும் ஒரே மாதிரி அமைந்த தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை. சல்யூட் தல – விவரம் இதோ

Dhoni

கிரிக்கெட் வாழ்க்கையை ஒரு சிலருக்குத்தான் ஒரே மாதிரியாக அமையும். தோனி போன்ற ஒரு சில வீரர்களுக்கு தான் அது பிரம்மாண்டமாக இருக்கும். அதிலும் பல ஏற்ற இறக்கங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த அணியின் கிரிக்கெட் வாழ்க்கை துவக்கமும் முடிவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கிறது.

இந்திய அணிக்காக 350 ஒருநாள் போட்டிகள், 90 டெஸ்ட் போட்டிகள், 98 டி20 போட்டிகளில் ஆடியுள்ள தோனி கிட்டத்தட்ட 17,000 சர்வதேச ரன்களை குவித்துள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதியன்று சவுரவ் கங்குலியின் தலைமையில் அறிமுகமானார் தோனி. இந்த கிரிக்கெட் பயணம் அவருக்கு இனிமையான துவக்கத்தை கொடுக்கவில்லை.

முதல் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக அறிமுகமானார். ஒரே ஒரு பந்தை எதிர்கொண்டு ரன் அவுட் ஆகினர் தோனி. அதன்பின்னர் 16 வருடங்கள் ஆடினார். தனது துவக்கத்தை போலவே இறுதிப் போட்டியிலும் ரன் அவுட் ஆகி உள்ளார் தோனி. கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி அன்று உலக கோப்பை தொடரின் செமி பைனல் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இந்த போட்டியில் அரைசதம் அடித்து இருந்தார்.

Dhoni-2

தேவையில்லாமல் ஒரு ரன் அதிகமாக ஓடி ரன் அவுட் ஆகி சோகமான முகத்துடன் வெளியேறினார் தோனி. இதன் காரணமாக இந்தியா உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இவரது கிரிக்கெட் வாழ்க்கை ரன் அவுட்டில் துவங்கி ரன் அவுட்டில் முடிந்திருக்கிறது. தோனியின் ஓய்வு ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.

- Advertisement -

Dhoni-1

அவர் ஓய்வை அறிவித்ததிலிருந்து முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் அனைவரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களையும், தோனியுடனான நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.