இதுவரை பார்த்திடாத புது மாஸ் லுக்கில் நம்ம தல தோனி

Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி ராணுவ பயிற்சியினை விக்டர் படையுடன் சேர்ந்து மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து சுதந்திர தினம் அன்று லே பகுதியில் உள்ள பகுதியில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார்.

அதனை முடித்து அவர் ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ பயிற்சி பள்ளி என அனைத்து இடங்களுக்கும் சென்று அவருடன் கலந்துரையாடினார். அதன் பின்னர் தற்போது தனது பயிற்சியை வெற்றிகரமாக முடித்த டோனி தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு திரும்பினார்.

- Advertisement -

இந்நிலையில் தோனி தற்போது ஜெய்ப்பூர் ஏர்போர்ட்டில் இருந்து வெளிவரும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் தோனி ஒரு புது லுக்கில் தலையில் டர்பன் கட்டிக்கொண்டு உள்ளார். அவர் நடந்து வரும் அந்த வீடியோவை பதிவிட்ட தோனி ரசிகர்கள் அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். இருப்பினும் தோனி எதற்காக ஜெய்ப்பூர் சென்றுள்ளார் என்ற தகவல் உறுதியாக தெரியவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement