ராணுவ உடையில் தோனியின் பயிற்சி வெளியான புதுபுகைப்படம் – வைரல் போட்டோ

Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற அனுமதி கேட்டிருந்தார். இந்த அனுமதியினை இந்திய ராணுவம் தோனிக்கு அளித்தது.

Dhoni

- Advertisement -

அதனைத் தொடர்ந்து இரண்டு மாத பயிற்சி காலத்தில் இணைந்து தோனி அடுத்த 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தோனி தனது பயிற்சியினை நேற்று தொடங்கினார்.

விக்டர் படையுடன் இணைந்து அவர் ஆகஸ்ட் 15 ராணுவ வீரர்களின் அணிவகுப்பில் கலந்துகொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் தோனி ராணுவ சீருடையில் பேட் ஒன்றிற்கு ஆட்டோகிராப் இடும் புகைப்படம் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement