நான் அவுட் இல்லை இது ட்ரையல் தான் – தோனி வெளியிட்ட அருமையான பதிவு இதோ

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி உலகக்கோப்பைக்கு பின்பு ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இன்று வரை ஓய்வு பெற்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய தோனிக்கு தற்போது நடைபெறும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடர வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் தோனி தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில் கிரிக்கெட் விளையாடும் ஒருவர் முதல் பந்திலேயே போல்டாக அனைவரும் ஆர்பரிக்கின்றனர். ஆனால் அந்த பேட்ஸ்மேன் நான் அவுட் கிடையாது இது ட்ரையல்பந்து என்று கூறுகிறார். ஆனால் அதில் ஆச்சரியம் என்னவென்றால் அடுத்த பந்தில் போல்டாகி வெளியேறுகிறார்.

- Advertisement -

இந்த வீடியோவை பகிர்ந்த கோலி இதேபோன்றுதான் பள்ளி நாட்களில் ட்ரையல் பால், அம்பயரின் முடிவே இறுதியானது போன்ற பல விதிமுறைகளை கொண்டு நாம் விளையாடி இருப்போம் என்று தனது நினைவை பகிர்ந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது தனது சொந்தஊர் ராஞ்சியில் இருக்கும் தோனி கிரிக்கெட் பயிற்சிகளை உள்ளூர் மைதானத்தில் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement