துபாய்க்கு ஏற்றுமதியாகும் தோனி விளைவித்த இயற்கை காய்கறிகள் – பின்னால் இருக்கும் சூப்பர் காரணம்

dhoni
- Advertisement -

கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனி அதன் பிறகு முழுநேர விவசாயியாக மாறினார். தனது ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் 10 ஏக்கர் விவசாய நிலத்தில் அவர் இயற்கை முறைப்படி பப்பாளி, வாழை ஆகியவற்றை பயிரிட்டு வளர்த்து வந்தார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்னர் வரை அவர் தனது பண்ணை வீட்டில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உரத்தின் மூலமாக விவசாயம் செய்வது குறித்த பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

Dhoni 1

மேலும் அவர் டிராக்டர் மூலம் பயிரிடுவது போன்ற அனைத்து புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ஹிட்டடித்தன. மேலும் இயற்கை முறையில் அவர் விவசாயம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், செயற்கையான பூச்சிக்கொல்லி மருந்துகளால் இருக்கும் ஆபத்து குறித்தும் அவ்வப்போது வீடியோவில் பேசி வருகிறார். தற்போது தான் இயற்கை முறையில் பயிரிட்ட காய்கறிகளான தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை துபாய்க்கு ஏற்றுமதி செய்வதற்காக ஜார்கண்ட் அரசிடம் கோரிக்கை வைத்தார்.

- Advertisement -

அவர்களும் அவரது கோரிக்கையை ஏற்று துபாய்க்கு காய்கறிகளை ஏற்றுமதி செய்ய முன்வந்துள்ளனர். மேலும் தங்களது வேளாண்மை துறை மூலம் இதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தோனி இயற்கை முறையில் உரத்தை பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட காய்கறிகள் ஏன் துபாய்க்கு அனுப்பப்படுகின்றன என்பது குறித்த பின்னால் இருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி ஜார்கண்ட் மாநிலத்தில் தொழில் தொடங்க எந்த உலக நிறுவனங்களும் முன் வருவதில்லை என்ற காரணத்தினால் தோனி செய்யும் இந்த செயல் மூலம் உலக நாடுகள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொழில் தொடங்க முன்வரும் என்ற காரணத்தினாலேயே அவர் இங்கிருந்து காய்கறிகளை ஏற்றுமதி செய்கிறார். மேலும் அவர் செய்யும் இந்த விவசாயத்தின் மூலம் வரும் விளைச்சலைப் பொறுத்து அனைத்து விவசாயிகளுக்கும் இயற்கை முறை உரத்தில் உள்ள நன்மையை கொண்டு சேர்க்கும் வகையிலும் உரை விற்பனையையும் தோனி தரப்பில் இருந்து தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இயற்கையான முறையில் பயிரிடப்படும் இந்த காய்கறிகளின் விளைச்சலை இங்கிருக்கும் விவசாயிகளிடம் கொண்டு செல்லும் நல்ல எண்ணம் காரணமாகவும் டோனி இதனை செய்துள்ளார் தற்போது அவர் எதிர்பார்த்தது போலவே அவரது தோட்டத்தில் காய்கறிகள் நல்ல விளைச்சலை தர துவங்கியுள்ளதால் விரைவில் அவர் விவசாயிகளின் நலனுக்காக உர விற்பனையையும் துவங்குவார் என்று கூறப்படுகிறது.

Advertisement