தோனியின் வாழ்நாளில் மறக்கமுடியாத நாள் இன்று. 15 ஆண்டுக்கு முன்பு – ரசிகர்கள் கொண்டாட துவங்கிய தருணம்

Dhoni

சர்வதேச கிரிக்கெட்டின் மிகச் சிறந்த ஃபினிஷரும், இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டனாக போற்றப்படுபவர் மகேந்திர சிங் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக பல சாதனைகளை பேட்ஸ்மனாகவும், விக்கெட் கீப்பராகவும், கேப்டனாகவும் பல சாதனைகளை படைத்த இந்த சரித்திர நாயகன் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியோடு சர்வதேச கிரிக்கெட்டிற்கு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து விலகினார்.

Dhoni 1

அவரின் சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். அந்த அளவிற்கு பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ள தோனி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக அதிக ரன்களை அடித்துள்ளார். அதுவும் ஒரு சாதனைதான் அந்த சாதனை 15 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் 2005ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் படைத்திருந்தார்.

அந்த போட்டியில் 145 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் என இலங்கை அணி சின்னாபின்னமாக்கி 183 ரன்களை சேர்த்திருப்பார் தோனி. இந்த இன்னிங்சில் அவர் அடித்த 15 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் மூலம் 120 ரன்களை அவர் சேர்த்திருப்பார். அவரின் இந்த 183 ரன்கள் மூலம் இந்திய அணி 298 ரன்களை அசால்டாக சேசிங் செய்து அசத்தியது.

அங்கிருந்துதான் தோனி ஒரு பினிஷராக ஆரம்பித்தார். அதன்பின்னர் அவரது பினிஷிங் பற்றி நாம் கூற வேண்டிய அவசியம் இல்லை. அதன்பின்னர் 15 ஆண்டுகளாக வெற்றிகரமான வீரராக வலம் வந்த தோனிக்கு சேஸிங்கில் பினிஷராக முதல் முறை வித்திட்ட நாள் தான் இன்று. இதனை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அவரைப் பெருமைப் படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -