தோனியின் முதல் காதலான பிரியங்காவின் புகைப்படம். வைரலாகும் போட்டோ – உண்மை இதுதான்

Sakshi

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் சாக்ஷி தோனி ஆகியோருக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் இந்த தம்பதிக்கு 2015ஆம் ஆண்டு ஸிவா என்ற அழகிய பெண் குழந்தையும் பிறந்தது. இவர்கள் மூவரும் தற்போது அழகான ஒரு குடும்பமாக ராஞ்சி பண்ணை வீட்டில் வசித்து வருகின்றனர்.

Sakshi

இந்நிலையில் தற்போது தோனியின் முன்னாள் காதலியான பிரியங்காவின் புகைப்படம் என்று ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது. தோனி சாக்ஷி காதலுக்கு முன்னரே தோனி பிரியங்கா என்ற பெண்ணை நேசித்தார் எனவும் அவரை தான் தோனி திருமணம் செய்ய விரும்பியதாகவும் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான “தோனி தி அண்ட் ஸ்டோரி” படத்தில் கூறப்பட்டது.

- Advertisement -

ஆனாலும் இறுதியில் எதிர்பாராதவிதமாக கார் ஆக்சிடென்ட் இல் பிரியங்கா இறக்கவே தோனி மீண்டும் சாக்சியை காதலித்து திருமணம் செய்தார். இந்த சம்பவம் அனைத்துமே அந்த படத்திலும் குறிப்பிடப்பட்டது. இந்நிலையில் தற்போது தோனியின் முதல் காதலியான பிரியங்கா என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தோனிக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கும் அந்த பெண் பிரியங்கா என்று கூறி சிலர் இந்த புகைப்படத்தை தவறாக பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால் அது உண்மையில்லை தோனிக்கு அருகில் இருக்கும் அந்தப் பெண் டோணியின் மனைவி சாக்ஷி தான் என்றும் அது அவர்கள் இருவரும் திருமணமா ஆரம்பத்தில் முசிறிக்கு சென்றபோது போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது அது தவறாக வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

- Advertisement -
Advertisement