எதற்கும் கவலைப்படாத தோனி..! வாழ்வில் எதிர்கொண்ட சர்ச்சைகளும், சூழ்ச்சிகளும்..!

dhoni
- Advertisement -

இந்திய அணியின் ஒப்பற்ற ஒரு வீராராக இருந்து வருபவர் தோனி. இந்திய அணியில் பல கேப்டன்கள் வந்து சென்றாலும் தோனியின் புகழை பற்றி பல தலைமுறைகள் பேசும். ஆனால், 2015 ஆம் ஆண்டு தோனி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஒய்வு பெற்றது தொடங்கி இன்று வரை தோனி மீதான பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு தான் வருகிறது.
MSdhoni
2015 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுகிறார் என்ற அறிவிப்பை தோனி அறிவிக்காமல் இந்தியகிரிக்கெட் வாரியம் அறிவித்தது முதல் சர்ச்சையாக தொடங்கியது . கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதை ஒரு வீரர் அறிவிக்காமல் எப்படி கிரிக்கெட் வாரியம் அறிவிக்கலாம் என்று ஒரு பெரும் சர்ச்சை கிளம்பியது.ஒரு நாள் போட்டிகளில் அதிரடியாக விளையாடியா தோனி டெஸ்ட் போட்டிகளில் ஜொலிக்கவில்லை.

எனவே, தோனியின் டெஸ்ட் ஒய்வு அவராக விருப்பபட்டு எடுத்தாரா, இல்லை கட்டாயத்திற்கு தள்ளப்பட்டாரா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு அடுத்த சர்ச்சையாக தோனி இந்திய அணியின் கேப்டனான பிறகு அணியில் இருந்த கம்பீர், ஷேவாக்,யுவ்ராஜ் என பல மூத்த வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியேற்றபட்டனர். அதில் இறுதி வரை நிலைத்து நின்றவர் சச்சின் மட்டுமே.
dhoniplay
2015 உலக கோப்பைக்கு பிறகு தோனி தலைமையிலான இந்திய அணி பல தோல்விகளை சந்தித்து. அதே போல தோனியும் கொஞ்சம் பார்ம் அவுட் ஆனார். இதனால் தோனி மீதான விமர்சனங்கள் வலுக்க இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகுடத்தை கோலிக்கு விட்டுகொடுத்தார். இந்தனை சர்ச்சைகளை கடந்தாலும் இன்றும் தான் ஒரு சிறந்த வீரர் என்று தனது பேட் மூலம் பதிலளித்து வருகிறார் தோனி.

- Advertisement -
Advertisement