ஸ்போர்ட்ஸ் பைக்கில் பயிற்சியை முடித்து வீடு திரும்பும் தோனி – வைரலாகும் வீடியோ

Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி உலகக்கோப்பைக்கு பின்பு ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இன்று வரை ஓய்வு பற்றிய எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய தோனிக்கு தற்போது நடைபெறும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடர வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

இந்நிலையில் தற்போது தோனி தனது சொந்தஊரான ராஞ்சியில் கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் அவர் தற்போது மைதானத்தில் பயிற்சியை முடித்து தனது கவாஸாகி ஸ்போர்ட்ஸ் பைக்கில் வீட்டிற்கு செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் தோனி பைக் பிரியர் என்பது நாம் அறிந்ததே ஆனால் நமக்கு தெரியாத தகவல் யாதெனில் அவர் தற்போது பயன்படுத்தும் அந்த கவாஸாகி h2 பைக்கின் விலை இந்திய மதிப்பில் சுமார் 35 லட்ச ரூபாய் என்று தகவல் வெளியாகியுள்ளன. மேலும் தற்போது ராஞ்சியில் அவர் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதற்காக தீவிர பயிற்சியினை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement