மைதானத்தை உயரத்திற்கு உங்களால் எப்படி சிக்ஸ் அடிக்க முடிகிறது – வங்கதேச வீரரின் கேள்விக்கு பதிலளித்த தோனி

Dhoni
- Advertisement -

சமூக வலைதளங்களில் சமீபகாலமாகவே தோனி குறித்த செய்திகள் நிறைய வலம் வருகின்றன. அதிலும் குறிப்பாக தோனியுடன் நடந்த அனுபவங்கள் குறித்து பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். மேலும் கிரிக்கெட் குறித்து எந்த செய்தி வெளியானாலும் அதில் தோனி குறித்த ஒரு கேள்வியாவது கேட்கப்பட்டுவிடுகிறது.

Dhoni

- Advertisement -

செய்தியாளர்கள் மட்டுமின்றி கேள்வியை தொகுப்பவர்கள் மற்றும் சமூக வலைதளம் என அனைத்திலும் பேட்டி எடுப்பவர் தோனி குறித்த ஒரு கேள்வியினை கேட்டு விடுகிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனியை அனைவரும் கேப்டன் கூல் என்று அழைக்கின்றனர். அந்த அளவிற்கு அவர் நெருக்கடியான நேரத்தில் தனது பொறுமையை இழக்காமல் சிறப்பாக கையாள்வதால் அவருக்கு அந்த பெயரை ரசிகர்கள் சூட்டியுள்ளனர்.

தோனி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியில் கிட்டத்தட்ட 10 மாதங்களாக விளையாடாமல் உள்ளார். இதன் காரணமாக அவரது பெயரை இந்திய வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் இருந்தும் பிசிசிஐ நீக்கியது. இதனால் இந்த செய்தி வெளியானபோது ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதன் காரணமாக அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கஷ்டம் என்று கூறப்படுகிறது.

Dhoni

மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் அவர் இனி இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பே இல்லை என்று தோனி ஓப்பனாக கூறி உள்ளனர். ஆனால் தோனி இது குறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் தான்மீண்டும் இந்திய அணிக்கு இறங்குவதற்கான தீவிரமான வேலைகளை துவங்க ஆரம்பித்துவிட்டார். இந்த வருடம் மார்ச் இறுதியில் துவங்க இருந்த இந்த தொடருக்காக அவர் மார்ச் 2 ஆம் தேதியே பயிற்சியை மேற்கோண்டதுகுறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதன்பின்னர் கொரோனா பாதிப்பின் காரணமாக பயிற்சியை தொடரமுடியாத தோனி தற்போது ராஞ்சியில் தனது நேரத்தை கழித்து வருகின்றார். எப்போதும் சமூக வலைதளத்தில் இருந்து ஒதுங்கி இருக்கும் தோனி குறித்து நாள்தோறும் செய்திகள் வெளியாகி வருகின்றன. அவருடைய அனுபவம் குறித்தும் அவருடன் பழகிய சுவாரசியமான நிகழ்வுகள் குறித்தும் முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Sabbir 1

அந்த வகையில் தற்போது வங்கதேச கிரிக்கெட் வீரரான சபீர் ரஹ்மான் தோனி உடனான தனது அனுபவத்தை ஒரு பிரபல விளையாட்டு இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தோனி குறித்து கூறியதாவது : கடந்த முறை பெங்களூரில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் தோனி என்னை ஸ்டம்பிங் செய்து அவுட்டாகினார். அவருக்கு அதே போன்று ஒரு வாய்ப்பு இங்கிலாந்து உலகக் கோப்பை போட்டியின் போதும் கிடைத்தது.

- Advertisement -

ஆனால் கிட்டத்தட்ட என்னை ஸ்டம்பிங் செய்திருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் நான் புத்திசாலிதனமாக கிரீஸ்க்குள்ளே காலை வைத்து தப்பித்தேன். பின்பு தோனியிடம் சென்று இந்த முறை நான் முடியாது என்று கூறினேன். மேலும் தோனி குறித்து பேசிய ஷபீர் : உங்களது பேட்டின் ரகசியம் என்ன நீங்கள் சிக்ஸ் அடித்தால் மைதானத்திற்கு வெளியே சென்று விழுகிறது. நாங்கள் அடித்தால் பவுண்டரி கயிற்றைத் ஆகவே கஷ்டப்படுகிறது என்றேன்.

Sabbir 1

அதற்கு தோனி என்னிடம் இது எல்லாவற்றிற்கும் நம்பிக்கை தான் காரணம் என்றார். நான் அவரிடம் இருந்து இந்தியாவுக்கு எதிராக உங்களது பேட்டை விளையாட தருவீர்களா என்று கேட்டேன். அதற்கு பதில் அளித்த தோனி நிச்சயம் என் பேட்டை தருகிறேன். ஆனால் அதனை வைத்து இந்தியாவுக்கு எதிராக விளையாடக்கூடாது. மற்ற அணிகளுடன் விளையாடும் போட்டியில் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் தோனி கூறியதாக சபீர் ரஹ்மான் கூறியது குறிப்பிடத்தக்கது.

தோனி தனது திறமை மீது தான் வைத்திருக்கும் நம்பிக்கை காரணமாகவே தன்னால் பெரிய சிக்ஸர்களை அடிக்க முடிகிறது என்று கூறியுள்ளார். மேலும் கடந்த ஆண்டு முதல் இந்திய அணியில் விளையாடாமல் இருக்கும் தோனி தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை காரணமாகவே இன்னும் ஓய்வு முடிவினை வெளியிடாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement