தோனி வெளிட்ட ரகசியம் 4ஆம்,5ஆம் கள வீரராக.! களமிறக்கப்பட்டது எதற்க்காக..!

- Advertisement -

கடந்த மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி பட்டதை கைப்பற்றியது. இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய சென்னை அணி 3வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.

dhoni entry

கடந்த சில மாதங்களாக செயல் திறனில் குறையுடன் இருந்த தோனி, இந்த தொடரில் தனது திறமையை மீட்டுதான் தனது பர்ஸ்ட் கிளாஸ் ஆட்டத்தை நிரூபித்தார். இந்த தொடர் முழுவதும் பேட்டிங் தரவரிசையில் மிடில் ஆர்டரில் இறங்கிய போதும் தோனி அபாரமான ரன்களை குவித்தார்.

- Advertisement -

சமீபத்தில் தனது பேட்டிங் ஆர்டர் குறித்து பேசிய தோனி “நான் எனது அணியை வெற்றி பெறவைத்தாக வேண்டும் என்ற ஒரு பொறுப்பில் இருந்தேன். ஆனால், பேட்டிங் ஆர்டரில் மிகவும் கீழே வந்துவிட்டேன். அது எனக்கு ஒரு அழுத்தத்தை கொடுப்பது போன்ற ஒரு விடயம்.

dhoniplay

எந்த அளவிற்கு நான் பேட்டிங் வரிசையில் கீழே செல்கிறேனோ அந்த அளவிற்கு நான் சுதப்பிவிடுவேன். நான் எனது அணியில் பின்வரிசையில் சிறப்பான பேட்டிங் ஆர்டர் உள்ள அணியாக மாற்ற வென்றும் என்று எண்ணினேன். அதனால் நான் கொஞ்சம் பேட்டிங் வரிசையில் முன்னதாக களமிறங்க எண்ணினேன்.

dhonistand

பேட்டிங் வரிசையில் முன்னேற்றம் என்பது 3, 4 வது தர வரிசையில் களமிறங்குவது என்று அர்த்தம் இல்லை. எனக்கு அதிக ஓவர்களை விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று நினைதேன் ” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement