இவ்வளவு ஆண்டுகள் நான் வெற்றிகரமான கேப்டனாக இருந்ததற்கு காரணம் இதுதான் – தோனி ஓபன் டாக்

Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான தோனி இந்திய அணியின் கேப்டன் கூல் என்ற சிறப்பு பெயருடன் ரசிகர்களால் அழைக்கப்படுபவர். இந்நிலையில் தோனி உலகக் கோப்பை தொடருக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதனால் தோனி விரைவில் ஓய்வை அறிவிப்பார் என்று பலரும் கூறி வந்தனர்.

Dhoni

- Advertisement -

ஆனாலும் இன்றுவரை தோனி தனது ஓய்வு குறித்த எந்தவொரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. தற்போது உலக கோப்பை தொடருக்குப் பின் தோனி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். மேலும் அதில் தோனி கூறியதாவது : நானும் எல்லாரையும் போல ஒரு மனிதன் தான் எனக்கும் கோபம் வரும். ஆனால் மற்றவர்களை விட நான் கோபத்தை கட்டுபடுத்துவதில் சிறந்தவராக இருப்பதாக நினைக்கிறேன்.

அதனால் தான் என்னுடைய கோபம் வெளியே தெரிவதில்லை. மேலும் நானும் வெறுப்பு அடைவேன் ஆனால் அதிலிருந்து மீண்டு வந்து விடுவேன். ஒரு பிரச்சினையை ஆராய்வதை விட அதற்கான தீர்வை தேடுவது நல்லது என்பதை நான் நினைக்கிறேன். மேலும் எனது உணர்ச்சிகளை நான் சரியான முறையில் கட்டுப்படுத்துவதாக நினைக்கிறன்.

dhoni

இந்தியர்கள் எப்போதும் அதிக உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள் ஆனால் எனது உணர்ச்சிகளை நான் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதால்தான் என்னால் சரியான முடிவுகளை எடுத்து அதை வெற்றிகரமாக செய்துகாட்ட முடிகிறது. அதனால் தான் என்னால் இந்திய அணியை சிறப்பான பாதைக்கும், பல வெற்றிகளுக்கும் கொண்டு சென்றேன் என்றும் ஒரு கேப்டன் என்பவர் நேர்மையாக இருக்க வேண்டும் என்றும் தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement