கோலி வேண்டாம் அவருக்கு பதிலாக தமிழக வீரரான இவரை சேர்க்கலாம். ஆரம்ப காலத்தில் கோலியை ஒதுக்கிய தோனி – காரணம் இதுதான்

Dhoni-kohli
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான திலிப் வெங்சர்க்கார் முதன்முறையாக விராட் கோலியை இந்திய அணியில் சேர்க்க முயன்ற போது என்ன நடந்தது என்பது குறித்து தற்போது விரிவாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதன்படி அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி விராட் கோலியை மறுத்தது மட்டுமின்றி அவருக்கு பதிலாக தமிழக வீரர் ஒருவரை அணியில் இடம்பெற செய்ய பிசிசிஐ தலைவர் சீனிவாசன் இடம் பேசியுள்ளார்.

kohli 2

- Advertisement -

தற்போது இந்திய அணியின் அசைக்க முடியாத வீரராக கேப்டனாகவும், முன்னணி வீரராகவும் வளர்ந்து நிற்கும் விராட் கோலி 2008ஆம் ஆண்டு அண்டர் 19 அணியில் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக ஆடி இருந்தார். மேலும் அவரை உடனடியாக இந்தியாவில் சேர்க்க வேண்டும் என்று அனைவரும் கூறியபோது தோனி அவரை தேர்வு செய்ய மறுத்தது ஆச்சரியமாக இருக்கலாம்.

2008 ஆம் ஆண்டு இந்திய அணித் தேர்வுக்குழு அண்டர் 23 அணியில் சேர்க்க ஒரு சில இளம் வீரர்களை தேர்வு செய்தது. அந்த சமயத்தில் இந்திய அணி அண்டர் 19 உலக கோப்பையை கைப்பற்றியது. அந்த அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலியை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று திலிப் வெங்சர்க்கார் கேட்டுக்கொண்டார்.

Kohli

மேலும் அப்போது கோலி பேட்டிங்கில் சிறந்து விளங்கினார். அதற்கடுத்து இலங்கை அணிக்கு எதிரான தொடரில் கோலியை களம் இறக்கலாம் என்று முடிவு செய்தார். அந்த நேரத்தில் கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் ஆகியோர் விராட்கோலி சேர்த்துக் கொள்ள மறுத்தனர். அதற்கு காரணம் யாதெனில் கோலியின் பேட்டிங் அவர்கள் அதுவரை பார்த்ததே இல்லை.

- Advertisement -

மேலும் பழைய அப்போதைய இந்திய அணியுடன் களமிறங்க தோனி திட்டமிட்டிருந்தார். இதுகுறித்து திலிப் வெங்சர்க்கார் கூறுகையில் : நீங்கள் அவரின் (கோலியின்) ஆட்டத்தை பார்த்ததில்லை ஆனால் அவரை நான் பார்த்திருக்கிறேன் .நாம் இந்த பையனை நிச்சயம் அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்று சமாதானம் செய்துள்ளார். இந்த முடிவு அப்போது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Kohli

இருப்பினும் அவர் இந்த முடிவில் உறுதியாக இருந்தார் அப்போது பிசிசிஐ தலைவர் சீனிவாசன் மற்றும் தோனி ஆகியோர் கோலியை அணியில் சேர்க்க விரும்பவில்லை. அவருக்கு பதிலாக பத்ரிநாத்தை அணியில் சேர்க்க விரும்பி இருக்கிறார்கள். அதனால் கோலிக்கு பதில் பத்ரிநாத்தான் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் கோலி தனது திறமையை நிரூபித்து அணியில் இடம் பிடித்து இப்பொழுது நம்பர் 1 பேட்ஸ்மேனாக நிமிர்ந்து நிற்கிறார் என்று வெங்சர்க்கார் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement