ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கினால் என்ன ? தோனியை யாராலும் தடுக்க முடியாது – விவரம் இதோ

Dhoni-3
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான மகேந்திர சிங் தோனி இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகு கடந்த ஆறு மாதங்களாக எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதனால் தோனி விரைவில் ஓய்வு அறிவிப்பார் என்று விமர்சனங்கள் வெளியாகிய நிலையில் இதுவரை தனது குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக தோனி வெளியிடாமல் இருந்து வருகிறார்.

Dhoni-1

- Advertisement -

இதனால் அவரது ரசிகர்கள் தோனி மீண்டும் திரும்புவாரா ? அல்லது திடீர் ஓய்வை அறிவிப்பாரா ? என்ற குழப்பத்திலேயே உள்ளனர். ஆனால் தோனி இப்போதைக்கு ஓய்வு முடிவினை அறிவிக்க போவதில்லை என்றே தெரியவந்துள்ளது. ஏனெனில் அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை அணியில் விளையாட விருப்பமாக இருக்கிறார் என்று ஏற்கனவே அவர் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியது.

அதற்கடுத்து தற்போது இந்திய அணியின் ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து தோனியின் பெயரை பிசிசிஐ நீக்கியுள்ளது. இதனால் தோனியின் இடம் மீண்டும் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் தோனியின் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் அனைவரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் தற்போது ஒப்பந்த பட்டியல் எல்லாம் தனக்கு ஒரு பெரிய விடயமே கிடையாது என்பது போல தோனி பயிற்சி செய்து வருகிறார்.

ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் அவர் தினமும் கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடும் ஜார்கண்ட் அணி வீரர்களுடன் பயிற்சி எடுக்கும் தோனி இந்த வருட ஐ.பி.எல் தொடரை எதிர்நோக்கி தனது பயிற்சியை தீவிரப்படுத்தி வருகிறார் ஏனெனில் ஐபிஎல் போட்டிகளில் தோனியின் ஆட்டம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் அவர் டி20 உலக கோப்பையில் விளையாடுவார் என்று தெரிகிறது.

ஏற்கனவே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் தோனி ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியில் தேர்வாக வாய்ப்பு இருக்கும் என்றும் கூறியிருந்தார். எனவே தற்போது ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி தோனி தொடர்ந்து பயிற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement