- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அரையிறுதியில் காயத்துடன் போராடிய தோனி. ரன் அவுட் ஆகும் முன்னர் தோனிக்கு என்ன ஆனது தெரியுமா ? – வைரலாகும் வீடியோ

உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த தோல்விக்கு பின்னர் தோனி இந்திய அணியில் இருந்து ஓய்வு பெறுவார் என்ற செய்தி தொடர்ந்து வெளியாகி வருகிறது. மேலும் இந்திய அணி குறித்து பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தோனி அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் ரன் அவுட் ஆகி வெளியேறும் அந்த ஓவரில் தோனிக்கு ஏற்பட்ட காயம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அணி 19 ஓவரில் முதல் பந்தில் சிக்சர் அடித்து விட்டு பின்னர் அதற்கு அடுத்த பந்தில் ரன் அவுட் ஆனார் தோனி.

- Advertisement -

ஆனால் அந்தப் பந்தை விளையாட முயன்றபோது அந்தப் பந்து தோனியின் வலது கை கட்டை விரலில் பலமாக தாக்கியது இதனால் அப்போது அவரின் வலது கை கட்டை விரல் வீக்கம் அடைந்து எலும்பு முறிவு ஏற்படும் அளவிற்கு சென்றது. அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு இரண்டாவது இரண்டாக ஓடி வரும் பொழுது ரன் அவுட் ஆனார் தோனி.

மேலும் போட்டி முடிந்து நியூசிலாந்து வீரர்களுக்கு கை கொடுக்கும் போது வலது கையில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவர் இடது கையிலேயே அனைவருக்கும் கைகுலுக்கினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ :

இணைப்பு மேலும் போட்டி முடிந்த பிறகு தோனியின் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் தோன்றி தனது கைகளில் வீக்கம் இருப்பது தெளிவாக தெரிகிறது இந்த வீக்கம் சாதாரணமா இல்லை எலும்பு முறிவு ஏற்படும் அளவிற்கு பண வீக்கம் என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -
Published by