கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணனாக மாறி புல்லாங்குழல் ஊதிய தல தோனி – வைரல் வீடியோ

Dhoni
- Advertisement -

இந்திய அணிக்காக மூன்றுவகை ஐ.சி.சி கோப்பைகளையும் வென்று கொடுத்தவர் தோனி. அவரது ஓய்வு குறித்த விவாதம் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து வருகிறது. அதுவும் குறிப்பாக உலக கோப்பை தொடருக்கு பின்னர் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக தோனி ஓய்வு பெற வேண்டும் என்ற குரல் எழுந்த வண்ணமே உள்ளன. ஆனால் தோனி ஓய்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

- Advertisement -

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் எதிரான தொடரில் இருந்து விலகிய தோனி ராணுவப் பயிற்சியை மேற்கொண்டு தற்போது வெற்றிகரமாக வீடு திரும்பியுள்ளார். அடுத்து வர இருக்கும் தென் ஆப்பிரிக்க தொடர்பாக தயாராகி வரும் தோனி என்ன செய்தாலும் அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் அவர் புல்லாங்குழல் ஊதும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இருப்பினும் அது பழைய வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ண ஜெயந்தி வந்ததால் புல்லாங்குழலுடன் இருக்கும் தோனி வீடியோ தற்போது வைரல் ஆகி வருவதும் மேலும் அது சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட வீடியோ என்பதும் தெரியவந்துள்ளது.

Advertisement