தோனி ஓய்வு முடிவை அறிவிக்க இந்த ஐ.பி.எல் வரை காத்திருக்க காரணம் இதுதானாம் – அப்போ சீக்கிரம் சொல்லிடுவாரு போலயே

msdhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரரான தோனி இந்திய கிரிக்கெட் அணிக்காக மூன்று வகையான ஐசிசி கோப்பைகளையும் அதாவது 50 ஓவர் உலகக் கோப்பை, 20 ஓவர் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை என அனைத்தையும் வென்று கொடுத்துள்ளார்.

dhoni with pant

- Advertisement -

இவரது தலைமையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வந்தது. அதன் பிறகு தனது கேப்டன்ஷிப் போய் விட்டு விலகிய தோனி இந்திய அணியில் ஒரு வீரராக விளையாடி வருகிறார். இதற்கிடையில் வயது மூப்பின் காரணமாக இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையுடன் கிரிக்கெட்டிற்கு விடைகொடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் தோனி இன்னும் ஓய்வு குறித்து எந்த ஒரு தகவலையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

மேலும் ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு ஓய்வு அறிவிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் கடந்த பல மாதங்களாகவே தோனிக்கு எந்த ஒரு வகையிலும் இந்தியன் இடம் கிடைக்கவில்லை. மேலும் தற்போது இந்திய அணியின் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.

dhoni

இதனால் தற்போது துவங்க இருந்த 13 ஆவது ஐபிஎல் தொடரை பயன்படுத்தி அணியில் இடம்பிடிக்க தோனி திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது. ஆனால் இப்போது ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்தும் இந்த போட்டி நடைபெறுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

- Advertisement -

இதனால் தோனி மீண்டும் கிரிக்கெட்டிற்கு வருவது கேள்விக்குறியாகியுள்ளது. ஐபிஎல் தொடர் மட்டும் ரத்தானால் மீண்டும் தோனி இடம்பிடிக்க வாய்ப்பே இல்லை என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனால் தோனியின் சிறுவயது பயிற்சியாளர் பானர்ஜி ஐபிஎல்லில் விளையாட வில்லை என்றாலும் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி தோனி தனது நெருங்கிய நண்பர்களிடம் தான் ஓய்வு பெற நேரம் வந்துவிட்டதாக கூறி உள்ளார்.

Dhoni

அதன்படி தோனி இந்த ஐ.பி.எல் தொடர் வரை ஓய்வினை அறிவிக்காமல் காத்திருக்க காரணம் யாதெனில் இந்த ஐ.பி.எல் தொடரில் அவரது திறன் எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ள தன்னை தானே பரிசோதித்து கொள்ளவே இந்த ஐ.பி.எல் தொடர் வரை காத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தோனி விரைவில் ஓய்வை அறிவிப்பார் என்றும் தெரிகிறது.

Advertisement