ஓய்விற்கு அடுத்து தோனியின் அடுத்த திட்டம் இதுதான் – தோனியின் மேனேஜர் வெளியிட்ட தகவல்

MSdhoni
- Advertisement -

இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. அடுத்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் கலந்து கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

Dhoni-2

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில் இந்திய அணியில் தோனி இடம்பெற மாட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. உலக கோப்பை தொடரில் தோனியின் மெதுவான ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளானது. மேலும் தோனி ஓய்வு பெறவேண்டும் என்றும் பலரும் அவரை வற்புறுத்தி வருவதாக தெரிகிறது.

தற்போது தோனியின் மேனேஜர் அவரது ஓய்வு குறித்தும் அடுத்து தோனியின் திட்டம் குறித்தும் கருத்து தெரிவித்து உள்ளார். அதில் தோனி ஓய்வுக்குப் பிறகு இந்திய ராணுவத்தின் முழு நேர பணியில் சேர வாய்ப்பு உள்ளது. ஏனெனில் அவர் ராணுவத்தின் மீது தீவிர ஆர்வமாக இருக்கிறார் இதுகுறித்து அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். ஏற்கனவே இந்திய ராணுவத்தின் பேராஷூட் படைப்பிரிவில் லெஃப்டினன்ட் கர்னலாக சிறப்பு பொறுப்பில் இருக்கிறார்.

dhoni

இந்த பயிற்சியை முடித்த தோனி பாலிதான் பேட்ச் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தோனி ஓய்வுக்குப் பிறகு அதே பொறுப்பில் முழு நேரமும் வேலையை தொடர வாய்ப்பு உள்ளது என்று அவர் மேனேஜர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாலிதான் முத்திரை பதித்த கிளவுஸை அணிந்து உலககோப்பையில் தோனி விளையாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement