ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் அகாடெமி துவங்க இருக்கும் தல தோனி – காரணம் இதுதானாம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான மகேந்திர சிங் தோனி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி காஷ்மீர் பகுதியில் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவருடைய பயிற்சி ஆகஸ்ட் 15ம் தேதி நிறைவடைகிறது.

dhoni

இதனை அடுத்து அவர் தற்போது ஜம்மு காஷ்மீரில் ஒரு கிரிக்கெட் அகாடமி தொடங்கும் திட்டத்தில் இருப்பதாகவும், ஜம்மு காஷ்மீரில் துவங்கப்படும் கிரிக்கெட் மூலம் அந்த மாநில இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக மத்திய விளையாட்டு துறை அமைச்சகத்துடன் தோனி பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் தெரிகிறது.

இதற்கு காரணம் யாதெனில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருந்து இந்திய அணிக்கு பெரிய அளவில் கிரிக்கெட் வீரர்கள் வருவதில்லை. மேலும் மிகவும் ஆபத்தான இடம் என்று கருதப்படும் ஜம்மு-காஷ்மீரில் இளைஞர்களின் கிரிக்கெட் ஆர்வத்தை தூண்டுவதற்கும் மேலும் இளைஞர்கள் பலர் முன்வந்து கிரிக்கெட் விளையாடவும் வைப்பதற்காக தோனி இந்த கிரிக்கெட் அகாடெமியை துவங்க உள்ளதாக தெரிகிறது.

Dhoni

இந்திய அணிக்கு காஷ்மீரை சேர்ந்த வீரர்களுள் தகுதி பெறவேண்டும் என்றும் இந்த கிரிக்கெட் அகாடமி துவங்க இருப்பதாக தோனி திட்டமிட்டுள்ளார். தனது சொந்த ஊரான ராஞ்சியை தவிர்த்து ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் அகாடமி துவங்க இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

- Advertisement -