தோனினா சும்மாவா..! என்னா ரன் அவுட்..! தோனி மேஜிக் கில் அசந்துபோன இங்கிலாந்து வீரர்..! – வீடியோ உள்ளே

Advertisement

இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள தோனியின் கீப்பிங் திறன் குறித்து நாம் அனைவரும் அறிந்த ஒரு விடயம் தான். தோனி அவரது மின்னல் வேக ஸ்டம்பிங் திறனிற்கு பெயர் போனவர். இந்நிலையில் நேற்று (ஜூலை 3) இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் தோனி செய்த ஸ்டம்பிங் வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.
dhonii
இங்கிலாந்து மற்றும் இந்தியா விளையாடிய மூன்றாவது ஒரு நாள் போட்டி நேற்று(ஜூலை 17) ஹெடிங்லே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக இந்திய அணியின் கேப்டன் கோலி 71 ரன்களை எடுத்திருந்தார்.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 44.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி விளையாடிகொண்டிருக்கும் போது 10 வது ஓவரை சஹல் வீசினார். சஹலின் முதல் பந்தை எதிர்கொண்ட ரூட் பாண்டியவிடம் அடித்து சிங்கிள் ஒன்றை ஓட முயன்றார்.


ஆனால், மறுமுனையில் இருந்த ஜேம்ஸ்,கீப்பிங் செய்து கொண்டிருந்த தோனியிடம் வருவதற்குள் மின்னல் வேகத்தில் தோனி பெயில்ஸை பறக்கவிட்டார். தோனி செய்தது மின்னல் வேக ரன் அவுட்டை அவுட் தான் என்று அறிந்து கொள்ள மூன்றாம் நடுவரின் உதவி தேவைபட்டது. இதோ அந்த வீடியோ

- Advertisement -
Advertisement