இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி ராணுவ பயிற்சியினை விக்டர் படையுடன் சேர்ந்து மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து சுதந்திர தினம் அன்று லே பகுதியில் உள்ள பகுதியில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார்.
New look of Dhoni ???? pic.twitter.com/olpG6G8WY2
— DHONI Trends™ (@TrendsDhoni) August 19, 2019
அதனை முடித்து அவர் ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ பயிற்சி பள்ளி என அனைத்து இடங்களுக்கும் சென்று அவருடன் கலந்துரையாடினார். அதன் பின்னர் தற்போது தனது பயிற்சியை வெற்றிகரமாக முடித்த டோனி லே விமான நிலையத்தில் இருந்து தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு திரும்பினார்.
அதன்பிறகு தற்போது தனது அபிமான ஹேர்ஸ்டைலிஸ்ட்-யிடம் சென்று தனது சிகை அலங்காரத்தை மேற்கொண்டுள்ளார். அவர் முடி வெட்டும் காட்சி தற்போது வீடியோவாக வைரலாகி வருகிறது. மேலும் அவ்வாறு அவர் அலங்காரம் செய்ய காரணம் யாதெனில் புதிய விளம்பரப்படத்தில் நடிக்க இருப்பதால் அவர் சிகை அலங்காரம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.



